அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

இன்னைக்கி இருக்கிற கான்கிரீட் காட்டுக்குள்ள பலதரப்பட்ட விலங்குகளின் குணம் கொண்ட மனிதர்கள் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் சிங்கம், புலி, நாய், பாம்பு, குரங்கு போன்ற விலங்குள் இருந்தாலும் இதில் யார் எந்த விலங்கு என்று கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக தான் இருந்தது. 

இதில் தனித்து இருந்தாலும் கம்பீரமாகவும்,  கௌரவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிங்கம் போன்ற ஆட்கள். ( ஏன்னா சிங்கம் சிங்கிளா தான வரும்.)

சந்தர்ப சூழ்நிலைக்காக காத்திருந்து பாயவேண்டிய நிலை வரும்போது பாயும் மக்களும் இருக்காங்க இவர்கள் புலியை போல குணம் உள்ள மக்கள். (புலி பதுங்கி பாயும்)

இது எனது ஏரியா இது என்னுடையது என்று தனக்கென ஒரு குறுகிய வட்டத்தை உருவாக்கி அதிலேயே வாழ்பவர்கள் இவர்கள நாய் குண மக்கள்

தனக்கு கெடுதல் செய்தால் கெடுதல் செய்யும் மக்களுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள மக்கள் பாம்பு போன்ற குணம் உள்ள மக்கள்.

இப்படி இருக்கும் போது குரங்கு போன்ற குணம் உள்ள மக்கள் என்றால் யாரை சொல்வது. மனம் ஓர் குரங்கு அது அங்குமெங்கும் அலைபாயும் என்று சொன்னால் அது மனதை பற்றிய விசயம். அப்படி என்றால் யாராக இருக்கும் என்று சொன்னால்...........

சரியான கொள்கை இல்லாமல் மரத்திற்கு மரம் தாவுவது போலவும்,  இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி மக்களை மயக்கி வாங்குவதை வாங்கி விட்டு அடுத்த ஒன்ற வாங்க தாவுகின்றரை தான் சொல்லவேண்டும். அப்படி பட்ட ஆள் யாராக இருப்பர் என்பது உங்கள் சிந்தனை வசம்.

ஹிட்லர்

அஜித் நடித்த பில்லா படத்தில் நாம நல்லாயிருக்கனும்னா யார வேணும்னாலும், எத்தன பேர வேண்டுமானாலும் கொல்லலாம் அப்படின்னு ஒரு வசனம் வரும்.
அப்படி சொன்ன அஜித்துக்கு தியேட்டரில் கைதட்டல்.

அப்படின்னா அப்படியே வாழந்த ஹிட்லர் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய தலைவன் தான்.  தன்இனம், தன் மக்கள், தன் நாடு முன்னேற வேண்டும் என்றால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தான்.

அப்படி தான் தன் இனத்தை பாதுகாத்தார் ஹிட்லர். தப்பு செய்தாலும் தவறு செய்தாலும் அதுக்கு ஓர் காரணம் இருக்கும். அப்படி ஒரு காரணம் தான் இந்த யூத படுகொலை.  தன்னுடைய சுயசரிதையான மெயி்ன் கேம்ப் புத்தகத்தில் இதை பதியவைத்திருக்கிறார் ஹிட்லர்.

ஆனால் இதற்கெல்லாம் மூலகாரணமாக இருந்தது ஒரு புத்தகம்.
தி புரோட்டாகால் ஆஃப் த எல்டர்ஸ் ஆஃப் த சியான்
 (The Protocols of the Elders of Zion)
இந்த புத்தகம் ரஷ்ய உளவுதுறையால் யூதர்களுக்கு எதிராக தொகுத்து எழுதப்பட்ட ஓர் புரட்டான நூல். இந்நூலை இன்னமும் பல ஐரோப்பியர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.  உலக வரலாற்றிலேயே ஒரு நூல் ஒரு இனத்தை அழிக்க தூண்டுகோளாக இருந்தது என்றால் அது இந்த நூல் தான்.

இதில் ஏசுவின் மரண காரணத்திற்கு ஒரு யூதன் தான் காரணம் என்பதிலிருந்து இப்பொழுது உள்ள வட்டி தொழில் வரை உள்ள குற்றங்கள் அடுக்கடுக்காக அதில் இடம்பெற்றிருந்தன.

அது போல பல குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டாலும். ஜெர்மன் போரில் ஜெர்மனியில் இருந்த யூதர்கள் ஜெர்மன் ராணுவத்தினரின் காலை வாரியிருந்தார்கள்.  யுத்த காலத்தில் போர் தளவாடங்களை தயாரிக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தளவாடங்கள் அல்லாத ராணுவம் தோல்வியடைந்தது. இது போன்று பல தவறுகளை இவர்கள் செய்து வந்தனர்.

இது பல ஜெர்மானியர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் யூதர்கள் தனவான்களாகவும், வட்டிக்கு பணம் கொடுத்ததாலும், அரசியலில் முக்கிய இடத்தில் இருந்ததாலும் இவர்களை எதிர்க்க யாரும் துணியவில்லை.

அப்படி துணிவுடன் எதிர்தத தலைவர் ஹிட்லர். அதனால் மக்கள் அவரை எளிதில் ஏற்றுக்கொண்டனர்.

இதில் சுவாரசியமா விசயம் என்னவென்றால்
1.  ஹிட்லரும், ரஷ்யாவும் இதில் ஒற்றுமையாக இருந்தது.
2. ஹிட்லர் ஒரு யூதர் என்பது. ( இது பற்றி அவருடைய டி.என். ஏ. ரிப்போர்ட் சொல்கிறது.0
3. ,இதில் அவருடைய கட்சியின் பெயர் நேசனல் சோஷலிஸ்ட் பார்ட்டி என்பது

போலி பாராட்டுக்காக


எமது நண்பர் திரு. எக்ஸ் ஒரு விசயத்தை சொல்ல வேண்டும் என்றால் அதை அப்படியே முழம் நீட்டுக்கு நீட்டி முழக்குவார். அவருக்கு பெரிய கல்கி, அல்லது சாண்டில்யனோ என்று நினைப்பு. சொல்ல வேண்டியதை அப்படி வர்ணித்து பேசுவார். அது அவருடைய இயல்புதான் என்று நான் கவலை படுவதே இல்லை.

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் என்னை அப்படி சிந்திக்க வைத்துவிட்டது. அது என்னவென்றால் சாலையோரத்தில் ஒருவர் அடிபட்டு கிடக்கிறார். அதை பெலிக்ஸ் அப்படி தத்துருபமாக விளக்கி சொன்னார்.

அது என்னவென்றால் பெலிக்ஸ் சாலையோரத்தில் நடந்து வரும் போது அவருக்கு அருகில் ஒருவரோடு பேசிக்கொண்டு வந்ததாகவும். அவர் உலக விசயம் பற்றியும், அரசியல் பற்றியும் அருமையா பேசிக்கொண்டுவந்ததாக கூறினார். திடீரெண்டு எதிரில் வந்த கருப்பு நிற ஸ்கார்பியோ கார் தான் வாங்க ஆசைப்பட்ட கார் அதுவெண்டும் கூறினார். சரி என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.

அந்த கார் மிக அழகாக இருந்தாகவும் கூறினார். அந்த கார் அவர் அருகில் பேசிக்கொண்டு வந்தவரை மோதி தூக்கி எறிந்ததாகவும். மோதப்பட்ட அவர் அரை பனைமர உயரத்திற்கு தூக்கி எறியப்பட்டதாகவும் கூறினார். நான் மிக ஆர்வமாக பிறகு என்ன ஆனது என்று கேட்டேன். அதற்கு அவர் தூக்கி எறியப்பட்ட அவர் அடிப்பட்டு அங்கேயே கிடப்பதாக கூறினார்.

அதற்கு நான் ஏன் அப்படியே அவரை விட்டுவிட்டு வந்தாய் என்றும் அவருக்கு சம்பந்தபட்டவர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டியது தானே அது அவருக்கு உதவியாக இருக்குமே என்று கேட்டேன்.

அதற்கு பெலிக்ஸ் சொன்னார் அதனால் தான் இதை உன்னிடம் சொல்கிறேன் என்றார். எனக்கு மனம் அதீம பதைபதைப்புடன் இருந்தது. மீண்டும் கேட்டேன் என்ன சொல்கிறாய். தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல் என்றேன்.

அதற்கு பெலிக்ஸ் அவர் உன் கடையில் வேலை பார்க்கும் நபர் என்று அவர் பெயரை சொன்னார். உடனடியாக அடிபட்டவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்றேன் மருத்துவமனையில் சேர்த்தோம். அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று மருத்துவர் சொல்லிவிட்டார்.

இருந்தாலும் பெலிக்ஸ் வந்த உடனே அடிபட்டவர் உன் கடைஆள் என்று சொல்லியிருந்தால் விரைந்து சென்றிருக்கலாம். அதைவிட்டு போலி பாராட்டுக்காக இப்படி நேரத்தை விரையம் செய்த பெலிக்ஸ் மீது கடுப்பில் தான் இருக்கிறேன்.

அதை போல் எனது நண்பரின் அம்மா தனது வீட்டில் தொலைகாட்சி பெட்டி பழுதானால் அதை என்னவோ உயிர் போகும் பிரச்சினை போல் அவ்வளவு உணர்வுபூர்வமாக சொல்வார்கள். அதே அவருடைய கணவர் உடல்நலம் பாதிக்கபட்டு இருக்கிறார். அதை அவர் சிரிப்பாக சொல்கிறார்கள். என்னவென்று சொல்ல நேரவிரையம் செய்தும் எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் தெரியாத ஆட்கள் இன்னமும் இருக்கிறார்கள்

Tamil Script and printing



கம்யூனிச மணல் வீடு





சிறு குழந்தைகள் கடற்கரையில் வீடுகட்டி விளையாடுவார்கள் நாம் பார்த்திருப்போம். ஒரு குழந்தை அதை கட்டி முடித்துவிட்டு சந்தோசமாக இருந்தாலும் வேறு யாரும் அதை இடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் பார்த்துகொண்டிருக்கும். அது நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நினைத்து அதை கவனித்துகொண்டிருக்கும். 

அப்படியே கவனித்தாலும் யாரும் அதை இடித்துவிடுவார்கள், இந்த கதை குழந்தைகளுக்கானது மட்டுமல்ல மிகப்பெரும் அரசியலுக்கும் அரசியல் சிந்தாந்தத்துக்கு உண்டானதும் கூட.

பொதுவுடைமை கட்சி என்று கூறப்படும் கம்யூனிஸ்ட் கட்சியும் இப்படிப்பட்ட நிலைமையில் தான் இருக்கிறது. 

ரஷ்யாவில் இன்று கம்யூனிசத்திற்கு பின் எங்கும் லஞ்சம் ஊழல் விபச்சாரம் என கொடிகட்டி பறக்கிறது.  ரஷ்ய கம்யூனிசம் தோல்வியில் போய் நிற்கிறது. சீன கம்யூனிசம் பரவாயில்லை. என்ன பெரிய வித்தியாசம் என்றால்.

ரஷ்ய கம்யூனிசம் கட்சியே அரசை கட்டுப்படுத்தும், ஆனால் சீன கம்யூனிசம் கட்சி வேறு அரசு வேறு என்று இருக்கும். ஆனால் பெரும்பாலும் கட்சியினரே அரச பதவியை வகிப்பர்.

சீன கம்யூனிசத்தை போல கேரள கம்யூனிசமும், ரஷ்ய கம்யூனிசத்தை போல மேற்குவங்க கம்யூனிசமும் இருக்கிறது.

தற்போது மேற்குவங்க கம்யூனிசம் தள்ளாட்டத்தில் தான் உள்ளது. 

கம்யூனிசம் மேலும் வளச்சி காதையில் செல்ல எந்த ஊர் கம்யூனிட்டாக இருந்தாலும். உண்மையான கம்யூனிட்டாக இருக்க வேண்டும். 

அப்படின்னு ஒரு தோழர் என்னிடம் புலம்பிகொண்டிருந்தார்.


எங்களது பக்கத்து ஊரில் ஒரு இட்லிகடை வைத்து பிழைப்பு நடத்திய ஓர் குடும்பம் இருந்தது. அந்த கடை ஓர் ரோட்டோர இட்லிகடை. அந்த கடையின் முதலாளி ரதியக்கா. இவர் ஓர் கைம்பெண். இந்த ரதிஅக்காவிற்கு இரு பெண் குழந்தைகள் அதில் ஒரு பெண் குழந்தை ஆறாவதும் மற்றோர் பெண் குழந்தை இரண்டாம் வகுப்பும் படிக்கிறார்கள்.இவரது கணவர்
இரண்டு வருடங்களுக்கு முன்பு மதுவின் தாக்கத்தால் கமாண்டிங் ஹலுசினேசன் என்ற மனசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு மனநோயாளியாகி தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார். இவர் ஓர் கூலி தொழிலாளி.
திருமணமான புதிதில் ரதிஅக்கா பெயருக்கேற்றாற்போல் நல்ல அழகாக தான் இருந்தார்கள். ஆனால் தற்போது அவர்களத கோலமே மாறிவிட்டது.
கணவர் இழந்த இந்த அக்கா கைம்பெண்களுக்காக உரசு தரும் உதவி தொகை வாங்க இருந்த நேரத்தில் அரசு பலருக்கு உதவிதொகையை நிறுத்தியிருந்தது. அதனால் தனக்கு எங்கு நிதியுதவி கிடைக்கும் என்று வெறுத்து மனு போடாமல் இருக்கிறார்.
இரு பெண்குழந்தைகளையும் கரை சேர்க்க வேண்டுமே என்று தனக்கு தெரிந்த கமையல்வேலையான இட்லி சுட்டு பிழைப்பு நடத்தி வந்தார். விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலைஉயர்வு, பேருந்துகட்டண உயர்வு என பல விலைஉயர்வுகளையும் உள்வாங்கி கொண்டு குறைந்த லாபம் கிடைத்தால் போதும் என்று இட்லி வியாபாரம் நடத்தி வந்தார்.
இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் சிலர் வீணாய் போன வீணர்கள் மது போதையில் வந்து விலையில்லா இட்லி கிடைக்குமா என்று வெட்டியாய் வம்பு வளர்ப்பதும் உண்டு.
அதையும் சகித்து கொண்டு பெண்பிள்ளைகளை கரை சேர்க்க வேண்டுமே என்று பிழைப்பு நடத்திவந்தவருக்கு திடீர் இடியாய் வந்து இறங்கியது அம்மா உணவகம்.
இதனால் பிழைத்த பிழைப்பு போய் வேறு தொழில் நடத்த தயாராகிவருகிறார்கள் இந்த அக்காவின் குடும்பம்.
அடுத்து அவர்கள் நம்பி இருப்பது .......................
இது போல் எத்தனை ரதி அக்காக்களோ.
இது போல காட்சி மாற வேண்டுமானால்
மாறவேண்டும்.......
விடியட்டும்

ஜேசீஸின் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நான் மயிலாடுதுறையில் ஜேசீஸ் என்ற அமைப்பில் உறுப்பினராக உள்ளேன். இந்த அமைப்பின் சார்பாக நடைபெற்ற தேர்தல் விழிப்பணர்வு பிரச்சாரத்திற்கு
திட்ட இயக்குனராக நான் அமர்த்தப்பட்டேன்.

             அந்த பிரச்சாரம் மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டிருக்கும் மாதிரி வாக்குசாவடியில் இருந்து துண்டுபிரசுரங்கள் வெளியிட்டு கடைவீதி முழுமையும் தருவதாகவும். முடிந்தால் அந்த மாதிரி வாக்குசாவடியில் ஏதாவது பணி செய்யலாம் என்று தான் முடிவு செய்திருந்தோம்.
             
             ஆனால் எங்களால் துண்டு பிரசுரங்கள் மட்டும் தான் வெளியிட முடிந்தது.  அந்த துண்டு பிரசுரத்தில் கீழ்கண்ட வாசகங்கள் தான் இடம்பெற்றிருந்தது.

             வாக்காளர் என்பதில் பெருமைபடுவோம். நாம் வாக்களித்து கடமையாற்றுவோம்.   நமது எதிர்கால குரல், நமது வாக்கு அதை சரியாக பயன்படுத்துவோம்.    நாம் வாக்காளர் என்பதை அடையாளப்படுத்துவோம், வாக்களிக்க தயாராக இருப்போம்.    மனதில் உறுதிவேண்டும், மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும்.  நோட்டுக்காக ஓட்டல்ல, ஓட்டை விற்காதீர்..
நமது வாக்கு நமது உரிமை.....