அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

இன்னைக்கி இருக்கிற கான்கிரீட் காட்டுக்குள்ள பலதரப்பட்ட விலங்குகளின் குணம் கொண்ட மனிதர்கள் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் சிங்கம், புலி, நாய், பாம்பு, குரங்கு போன்ற விலங்குள் இருந்தாலும் இதில் யார் எந்த விலங்கு என்று கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக தான் இருந்தது. 

இதில் தனித்து இருந்தாலும் கம்பீரமாகவும்,  கௌரவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிங்கம் போன்ற ஆட்கள். ( ஏன்னா சிங்கம் சிங்கிளா தான வரும்.)

சந்தர்ப சூழ்நிலைக்காக காத்திருந்து பாயவேண்டிய நிலை வரும்போது பாயும் மக்களும் இருக்காங்க இவர்கள் புலியை போல குணம் உள்ள மக்கள். (புலி பதுங்கி பாயும்)

இது எனது ஏரியா இது என்னுடையது என்று தனக்கென ஒரு குறுகிய வட்டத்தை உருவாக்கி அதிலேயே வாழ்பவர்கள் இவர்கள நாய் குண மக்கள்

தனக்கு கெடுதல் செய்தால் கெடுதல் செய்யும் மக்களுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள மக்கள் பாம்பு போன்ற குணம் உள்ள மக்கள்.

இப்படி இருக்கும் போது குரங்கு போன்ற குணம் உள்ள மக்கள் என்றால் யாரை சொல்வது. மனம் ஓர் குரங்கு அது அங்குமெங்கும் அலைபாயும் என்று சொன்னால் அது மனதை பற்றிய விசயம். அப்படி என்றால் யாராக இருக்கும் என்று சொன்னால்...........

சரியான கொள்கை இல்லாமல் மரத்திற்கு மரம் தாவுவது போலவும்,  இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி மக்களை மயக்கி வாங்குவதை வாங்கி விட்டு அடுத்த ஒன்ற வாங்க தாவுகின்றரை தான் சொல்லவேண்டும். அப்படி பட்ட ஆள் யாராக இருப்பர் என்பது உங்கள் சிந்தனை வசம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக