உண்மை கதாநாயகர்கள்


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த கதாநாயகன், நகைச்சுவைக்கும், அதிரடி சண்டைகாட்சிகளிலும் கலக்கும் கதாநாயகன் யாருன்னு குழந்தைகளுளிடம் கேட்டால் கூட சொல்லும் அது ஜாக்கிசான் தான் என்று.

அப்படிப்பட்ட ஜாக்கிசானும் தன்னை விட சிறந்த கதாநாயகனாக ராணுவத்தினரையும், தீயணைப்பு துறையினரையும் சொல்கிறார்.

ஜாக்கிசான் சினிமாவிற்காக ரிஸ்க் எடுக்கிறார். ஆணால் இவர்கள் பிறர் வாழ்க்கைக்காக ரிஸ்க் எடுக்கிறார்கள்.

அப்படிப்பட்ட தீயணைப்புத்துறையினருக்கு சமுதாயத்தில் பெரிய பெயர் மக்களிடம் இல்லை, அவர்கள் நமக்காக சிரமப்படுகிறார்கள் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லை. இவர்கள் வண்டி சாலையில் சென்ளால் தண்ணி வண்டி போகுது என்னு கிண்டல் செய்யும் மடையர்கள் இருக்கிறார்கள்.

தீயணைப்பு வண்டி வருகிறது என்று வழிவிட்டு செல்லாதவரை என்ன செய்ய.

காவல்துறையினருக்கு கொடுக்கும் மரியாதை இந்த நிஜ கதாநாயகர்களுக்கு இல்லை.

நம் உயிரையும் உடைமையையும் தன்னுயிரை பணையம் வைத்து காப்பாற்றும் இந்த வீரர்களை போற்றுவோம். மதிப்போம்.