கிராமத்தை நோக்கி நகர மக்கள்


மயிலாடுதுறை பகுதியில் அமைந்திருக்கும் உழவர் சந்தை இயங்குகிறதோ, இல்லையோ ஆணால் மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் சந்தை உதயமாகி மக்களுக்கு உதவி செய்கிறது.

முன்பெல்லாம் கிராம மக்கள் நகரத்தை நோக்கி பயணம் செய்தார்கள் ஆணால் இன்றோ மக்கள் கிராமத்தை நோக்கி பயணம் செய்யும் நிலைக்கு இந்த சந்தைகள் உருவாக்கியுள்ளது.

நம் முன்னோர்கள் அதாவது தாத்தா பாட்டி காலத்தில் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கியதை நினைவு படுத்துகின்றன.

மின்சாரம் மட்டும் தாத்தா காலத்தை நினைவு படுத்தவில்லை, 
இந்த சந்தைகளும் தான்

சம்சாரம் அது மின்சாரம்.


தமிழ்நாடு மின்சார வாரியம், இப்பொழுது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என பெயர் மாறிவிட்டது.

அப்படிப்பட்ட  மின்வாரியத்தி்ற்கு மின்துண்டித்த சமயத்தில் மின்சாரம் வருமா வராதா என தொலைபேசியில் கேட்டால்.  

வரும் ஆனா வராது என்று முதலில் ஒருவர் சொன்னார் நானும் கடுப்பாகி போனை வைத்துவிட்டார்.

மீண்டும் போன் செய்தால் மின்சாரம் எப்ப வரும், எப்படி வரும் அப்படின்னு தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல வரலாம்.
அப்படின்னார்.

ஆணால் மின்சாரம் வந்தது. யாருக்கும் தெரியாமல் இருட்டில். என் அச்சக இயந்திர வேலை முடிந்த பிறகு

நல்லவேளை சம்சாரம் ஒரு மின்சாரம் படத்தை எடுத்த டைரக்டர் இந்த வார்த்தையை கேட்கவில்லை.

கடவுளர்கள் ஜாக்கிரதை

நம்மாளுங்க எதையும் விட்டு வைக்க மாட்டாங்க போல, மரத்துல பிள்ளையார் உருவம் இருந்தா அந்த மரத்தோட பேர வச்சி அப்படியே பிள்ளையார்னு போட்டிடுவாங்க.

இப்ப மருத மரத்துல அந்த உருவம் இருந்தா அது மருதமரத்து பிள்ளையார், வேங்கை மரத்துல இருந்தா வேங்கைபிள்ளையார், இப்படி மரத்தையும் மத்த கல்லையும் மரியாதையுடன் பார்க்கும் இந்த மக்கள்,

மனிதர்களையும் விலங்குகளையும் பார்ப்பதில்லை,
மிக முக்கியமாக மனிதர்களை பார்பபது இல்லை.

அப்படியிருந்தால் மூலைக்கு மூலை இப்படிபட்ட கடவுளர்கள் தான் இருப்பார்கள்.

முன்பெல்லாம் மூலைக்கு மூலை டெலிபோன் பூத் இருந்தகாலம் மலையேறிவிட்டது என்றாலும் இந்த கடவுளர்கள் தான் மூலைக்குமூலை இருக்கிறார்கள்.

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ இவரின் பேரை சொல்லி நடத்தும் நாடகங்களும், காசு பார்க்கும் கூட்டமும் அதிகமாகிவிட்டது.

கடவுளர்களே பத்திரம், பத்திரம்.

கொலை கொலையாம்

இந்தியாவின் தேசதந்தை காந்தியடிகள் சுடப்பட்ட போது எடுத்த படம்.

காந்தியை சுட்ட கோட்சேவை மக்கள் மறக்கமாட்டார்கள், சுட்ட கோட்சேக்கு தூக்கு தண்டனை.

அவருக்கு மட்டும் தானா அல்லது அவரை சார்ந்தவர், அந்த குற்றத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அதற்கு உடந்தையானவர்கள் அனைவருக்குமா என்பது தான் கேள்வியே.

அப்படியிருக்க பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதுவும், சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்காமல் அதாவது குற்றம் செய்தவர்கள் மற்றும் அதை தூண்டியவர்களுக்கு தண்டனை அளிக்கமாமல்.

அவர்களுக்கு உதவினார்கள் என்ற காரனத்திக்காக அந்த மூவரையும் தண்டிப்பது எந்தவகையில் நியாயம். காந்திக்கு ஒரு நியாயம் ராஜீவ்காந்திக்கு ஒரு நியாயமா.

தமிழ்

தமிழ் நம் தாய் மொழியாக இருந்தாலும், அதை இன்றளவும் நாம் முழுவதுமாக பயன்படுத்துகிறோமா என்னால் இல்லை,

தமிழில் அருமையான அர்த்தங்களும் வார்த்தைகளும் இருந்தும், வேற்று மொழிக்கு தாவுகிறோம், வார்த்தைகளை அங்கு தேடுகிறோம்.

ஆக்சுவலா என்று உச்சரிக்காத குழந்தைகளே இன்று இல்லை, தாய், தகப்பனை டாடி மம்மி என்று அழைக்கும் காலம் தான் இருக்கிறது.

அம்மா என்று குழந்தைகள் அழைக்கும் போது “அ” என்ற எழுத்தும் “ம்” என்ற எழுத்தும் சேர்த்து உச்சரிப்பதால் குழந்தைகள் மூச்சை இழுத்து தம் கட்டி சொல்கின்றன இதனால் குழந்தைகளின் நுரையீரல் வலுபடுகிறது.

குழந்தைகள் அப்பா என்று அழைக்கும் போது வயிற்றில் உள்ள பிரச்சிகைள் நீங்குகிறது என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

குழந்தை பிறக்கும் போது உந்தி தான் பிறக்கிறது. அது முதல் உந்து அதாவது முதல் பிறப்பு என்றும், நோயினால் பாதிக்கப்படும் போது அதை நீக்க உட்கொள்ளப்படும் மருந்து, அதாவது மருஉந்து மறுபிறப்பு என்றும் கூறுகிறார்கள்.

மருந்து உட்கொண்டு நோயிலிருந்து விடுபட உதவுவது தான் மருந்து ஆகையால் அதை மறுபிறவி மருந்து என்கிறது. தமிழ் இது போல் பல அர்த்தங்கள் உள்ளது தமிழில்.

தமிழில் எழுதப்படாத மருத்துவ, வானியல், கணித மற்றும் வியாபார யுத்திகள் வேறு எந்த மொழியிலும் இல்லை.

ஏற்கனவே தமிழுடன் சமஸ்கிரம் கலந்து மலையாளமாக மாறியது, அது போல் இன்று தமிழுடன் ஆங்கிலம் கலந்து ஓர் புது மொழியாக மாறாமல் பார்த்துக்கொள்வோம்.

பிறகு அவர்கள் மொழிவாரி மாநிலம் கேட்பார்கள், ஜாக்கிரதை.

ஓரி தலைநகரின் நிலை

 கடைஏழு வள்ளல்களில் ஒருவரும், வில்வித்தையில் தேர்ச்சி பெற்று யாராலும் வெல்ல முடியாத அரசராக இருந்தார் ஓரி.

அப்படி பட்ட ஓரியின் புகழ்பெற்ற தலைநகரம் இருந்த இடம் அரியூர்நாடு.

இன்று அது அரியூர் கஸ்பா என்ற பெயரில் இருக்கிறது.

இந்த தகவலை அங்குள்ள ஒரு வயதானவர் சொல்ல கேட்டேன்.

இன்று பல வசதிகளும் இல்லாமல், அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கிவைப்பதாக அந்த வயோதிகரின் கருத்து.

உண்மையில் அங்கு சாலைவசதி இல்லை, இன்னமும் முன்னேற்றங்கள் அங்கு செல்லவில்லை.  பனங்காட்டுபட்டியில் இருந்து பெரியண்ணசாமி மலைக்கு செல்லும் சாலை மட்டும் உள்ளது. இது பக்கவழி பாதையாக இருக்கிறது. அங்குள்ள பள்ளிக்கு கூட வசதி குறைவு தான்.  அடிப்படை தேவைகளை மக்களுக்கு இன்னமும் சரிவர கிடைப்பதில்லை என்பது அந்த மக்களின் வருத்தம்.

இந்த மலையில் தண்ணீர் பிரச்சினை இல்லை என்பதால் தண்ணீரை மக்கள் பெரிதாக நினைப்பதில்லை.

எது எப்படியானாலும், தமிழர்களின் வீரத்திற்கும், நாகரீகத்திற்கும், கொடைக்கும் எடுத்துக்காட்டாக சொல்லும் இந்த வல்வில் ஓரியின் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.

ஓரி ஆண்ட மலையின் தலைநகரான இந்த இடம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

ஓரியின் தலைநகர் மட்டும் அழிவைநோக்கி போகவில்லை, நம் வீரமும், நாகரீகமும், கொடையும் தான் அழிவைநோக்கி போகிறது.

சங்க கால மன்னரின் தலைநகருக்கே இந்த நிலையென்றால், வரும்காலத்தில்.......................................................????

கொல்லிமலைக்கு ஆபத்து

சங்ககால கடைஏழு வள்ளல்களில் ஒருவர் வல்லில் ஓரி. இவர் ஆண்ட கொல்லிமலை இன்றும் பசுமை மாறாமல் இருக்கிறது. அந்த பசுமைக்கு ஆபத்தை ஏற்படுத்துவது போல் உள்ளது சிலரின் செயல்.  வனத்துறைக்கு சொந்தமான மூலிகை வனத்திற்கு சென்று பார்த்தால், அங்கு பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது அந்த வனத்தை பாதிக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
இது போல் தொடர்ந்து பிளாஸ்டிக்கை அனுமதித்தால் வரும் காலத்தில் கொல்லிமலை பிளாஸ்டிக் மலையாகத்ததாக் காட்சிதரும்.  பிளாஸ்டிக் மட்டுமின்றி மதுபுட்டிகளும் தாறுமாறாக கிடக்கிறது. வார விடுமுறை என்றால் மதுபாட்டிலுடன் வரும் நபர்கள் மதுபுட்டிகளை உடைத்து சிதறடித்து வேறு சென்றுவிடுகிறார்கள். இது அங்கு வரும் வனஉயிரினமான குரங்குகளுக்கு மட்டுமின்றி, சுற்றுலா பிரயாணிகளுக்கும் சங்கடமாக உள்ளது.

வனதுறை நடவடிக்கை எடுக்குமா