தமிழர் நிலைப்பாடு.

நியூரெம்பெர்க் சட்டங்கள் (Nuremberg Laws) இது ஹிட்லரால் உருவாக்கப்பட்ட ஓர் சட்டம் இந்த சட்டதின் முக்கியாம்சமே ஜெர்மனி வாழ் யூதர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, அவர்கள் இரண்டாம் மூன்றாம் தர மக்களாகவோ மக்களாக இருக்க செய்தது. அவர்களுக்கு எந்த வித உரிமைகளும் இல்லை என்பதே ஆகும்.
இதன் மூலம் காவல்துறைக்கு யூதர்களை கொல்வதற்கு முழு அதிகாரம் கொடுத்தார். இந்த யூதர்களை கொல்வதற்கு இரண்டு படைபிரிவுகளையும், ஒரு அதிநவீன மற்றும் கொடூரமான சிறைச்சாலையை உருவாக்கினார்.
இசந்த சிறைச்சாலையின் விஷேசமே உணவு, தண்ணீர் கிடையாது, ஆனால் விஷஜந்துக்கள் தாராளம்.
அப்படி கஷ்டப்பட்ட இந்த யூதர்கள் இன்று உலகின் முதல் இடத்தில் இருக்கும் உறவுபிரிவுக்கு சொந்தகாரர்கள்.
இவர்களுக்கு ஒரு தனி நாடு. யாரும் போய் அவர்களிடம் வாலாட்ட முடியாது. 
தன் மக்களிடம் தவறாக நடந்த தலைவர்களை கடத்தி கொண்டு போய் தண்டனை கொடுத்த பெருமை கொண்ட நாடு. அது போல் உலகில் எந்த யூதர்களுக்காவது பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து நிற்கும் நாடு. யூதர்கள் சிறந்தவர்கள் என்ற நம்பிக்கையை உருவாக்கிவருகிறது.



அது போலவே இலங்கையில் உள்ள தமிழ் மக்களை அழித்தொழிக்க ராசபட்சே அரசு தீவிர முயற்சியில் போர் பிரகடனம் செய்து.
தமிழ் மக்களை கொன்று வந்தது.  இந்த போரினால் தமிழர்களுக்கு தனி நாடு கிடைக்க கூடாது எனவும் அவர்களது கலை பண்பாட்டை அழிப்பதன் மூலம். இனத்தை அழிப்பது அவர்களது குறிக்கோளாக இருந்தது. ஆனாலும் தமிழர்கள் வீழ்ந்துவிட்டதாக இவர்களது நினைப்பு. இவ்வளவு கடினப்பட்டு இனமே இல்லை என நினைத்த யூதர்கள் முன்னேறும் போது தமிழர்கள்.....................
நினைவுக்கு,  டெசோ கூடிவிட்டது.