சித்த மதம், சித்தர்களுக்கு ஏது மதம்.

இந்து மதம் என்பது தனியொரு மதம் அல்ல. பல மதங்களின் கூட்டு தான். ஒரு குறிப்பிட்ட கடவுளை வணங்கும் மக்கள் தன் கடவுளை தலைமையாக கொண்டு தங்களுக்காக வகுத்துக்கொண்ட ஒன்று தான் இந்த மதம். 

ஆக இதில் பல கடவுளர்களை கொண்ட இந்து மதம் மட்டும் என்ன தனி ஒர மதமா என்றால் இல்லை என தைரியமாக சொல்லலாம். மற்ற நாடுகளில் பல கடவுளர்களை கொண்ட மதங்கள் இருந்தாலும் நம் இந்திய நாட்டில் இந்த இந்து மதம் தானே பிரதானமாக இருக்கிறது.

ஆரம்பத்தில் சைவமும், வைணவமும் தனித்தனி மதங்களாக இருந்தன. ஆரியர்கள் வந்த பிறகோ அல்லது அதற்கு முன்னதாகவோ இந்த இரு மதங்களும் இணைந்திருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அது மட்டும் இன்றி ஆரியர்கள் வந்த பிறகு அவர்களிள் கண்ணில் பட்ட தெய்வங்களின் சிலைகளை கூட இந்து மதத்திற்கு உட்படுத்தி வைத்திருந்தார்கள். 

இந்த பட்டியலில் திராவிடர்கள் வழிபட்ட கடவுளர்களான  அய்யனார், முனீஸ்வரன், வீரன் போன்ற எல்லை கடவுளர்களையும் விட்டுவைக்கவில்லை.

பெருநிலையான தெய்வங்களையும் கூட விடவில்லை. இதில் பைரவரை சிவனின் மறுஉருவம் என்று சித்தரித்து வைத்துள்ளார்கள். கொல்லிபாவையை காவல் தெய்வமாகவும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் ஒரு சில கடவுளர்களுக்கு ஒரு இடத்தில் மட்டுமே கோவில் உள்ளதால் அந்த கடவுளை ஏதோ விட்டுவிட்டார்கள் போல.

சில திராவிட கடவுளர்களுக்கு கோவில்கள் கூட இல்லை. ஆணால் சில கடவுளர்களுககு இருக்கிறது. உதாரணத்திற்கு கொல்லிமலையில் உள்ள கொல்லி பாவை என்றும்  தெய்வத்திற்கு கொல்லி மலையில் மட்டும் தான் கோவில் அந்த அம்மாவின் பெயரிலேயே இன்னமும் இந்த மலை கொல்லிமலை என்று அழைக்கப்படுகிறது. 

கொல்லி பாவை என்றால் இன்று மக்களுக்கு தெரியவில்லை எட்டுக்கை அம்மன் என்று தான் அழைக்கின்றார்கள்.

இந்த கொல்லிபாவையை பற்றி சங்க இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கிறது.

இந்த பாவையின் பரிவாரங்களில் ஒன்று பெரியண்ணசாமி இவரையும் சிவனாக ஆக்கி விட்டார்கள். ஆனால் உண்மையில் இவர் பாவையின் பரிவார தெய்வம்.

இதற்குண்டான ஆதாரங்கள்  சங்க இலக்கியங்களான நற்றினை, குறுந்தொகை, அகநானூற்றிறும் இருக்கிறது. அது மட்டுமின்றி நாலாயிரந் திவ்யபிரபந்தத்தில் இந்த பாவையை ப்ற்றி குறிப்புகள் உள்ளது. 

குங்கிலிய காட்டுக்குள்ளே கொல்லியம்பாவையை தரிசித்ததாக திருஞானசம்பந்தர் பாடியிருக்கிறார். பாவை இருக்கும் இடம் குங்கிலியம் நிறைந்திருக்கும் பகுதி தான்.

பாவை என்பது ஒரு பெருநிலையான திராவிட இன கடவுள். முருகனும் கூட திராவிட இன கடவுள் தான்.

அது போல கோவில் இல்லா கடவுளர்களான மனோகரி போன்ற கடவுளர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.

இது போன்ற கடவுளர்கள் பல ர்இருக்கிறார்கள் அவர்களை பற்றி கூறினால் கூறிக்கொண்டே போகலாம்.