போலி பாராட்டுக்காக


எமது நண்பர் திரு. எக்ஸ் ஒரு விசயத்தை சொல்ல வேண்டும் என்றால் அதை அப்படியே முழம் நீட்டுக்கு நீட்டி முழக்குவார். அவருக்கு பெரிய கல்கி, அல்லது சாண்டில்யனோ என்று நினைப்பு. சொல்ல வேண்டியதை அப்படி வர்ணித்து பேசுவார். அது அவருடைய இயல்புதான் என்று நான் கவலை படுவதே இல்லை.

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் என்னை அப்படி சிந்திக்க வைத்துவிட்டது. அது என்னவென்றால் சாலையோரத்தில் ஒருவர் அடிபட்டு கிடக்கிறார். அதை பெலிக்ஸ் அப்படி தத்துருபமாக விளக்கி சொன்னார்.

அது என்னவென்றால் பெலிக்ஸ் சாலையோரத்தில் நடந்து வரும் போது அவருக்கு அருகில் ஒருவரோடு பேசிக்கொண்டு வந்ததாகவும். அவர் உலக விசயம் பற்றியும், அரசியல் பற்றியும் அருமையா பேசிக்கொண்டுவந்ததாக கூறினார். திடீரெண்டு எதிரில் வந்த கருப்பு நிற ஸ்கார்பியோ கார் தான் வாங்க ஆசைப்பட்ட கார் அதுவெண்டும் கூறினார். சரி என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.

அந்த கார் மிக அழகாக இருந்தாகவும் கூறினார். அந்த கார் அவர் அருகில் பேசிக்கொண்டு வந்தவரை மோதி தூக்கி எறிந்ததாகவும். மோதப்பட்ட அவர் அரை பனைமர உயரத்திற்கு தூக்கி எறியப்பட்டதாகவும் கூறினார். நான் மிக ஆர்வமாக பிறகு என்ன ஆனது என்று கேட்டேன். அதற்கு அவர் தூக்கி எறியப்பட்ட அவர் அடிப்பட்டு அங்கேயே கிடப்பதாக கூறினார்.

அதற்கு நான் ஏன் அப்படியே அவரை விட்டுவிட்டு வந்தாய் என்றும் அவருக்கு சம்பந்தபட்டவர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டியது தானே அது அவருக்கு உதவியாக இருக்குமே என்று கேட்டேன்.

அதற்கு பெலிக்ஸ் சொன்னார் அதனால் தான் இதை உன்னிடம் சொல்கிறேன் என்றார். எனக்கு மனம் அதீம பதைபதைப்புடன் இருந்தது. மீண்டும் கேட்டேன் என்ன சொல்கிறாய். தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல் என்றேன்.

அதற்கு பெலிக்ஸ் அவர் உன் கடையில் வேலை பார்க்கும் நபர் என்று அவர் பெயரை சொன்னார். உடனடியாக அடிபட்டவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்றேன் மருத்துவமனையில் சேர்த்தோம். அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று மருத்துவர் சொல்லிவிட்டார்.

இருந்தாலும் பெலிக்ஸ் வந்த உடனே அடிபட்டவர் உன் கடைஆள் என்று சொல்லியிருந்தால் விரைந்து சென்றிருக்கலாம். அதைவிட்டு போலி பாராட்டுக்காக இப்படி நேரத்தை விரையம் செய்த பெலிக்ஸ் மீது கடுப்பில் தான் இருக்கிறேன்.

அதை போல் எனது நண்பரின் அம்மா தனது வீட்டில் தொலைகாட்சி பெட்டி பழுதானால் அதை என்னவோ உயிர் போகும் பிரச்சினை போல் அவ்வளவு உணர்வுபூர்வமாக சொல்வார்கள். அதே அவருடைய கணவர் உடல்நலம் பாதிக்கபட்டு இருக்கிறார். அதை அவர் சிரிப்பாக சொல்கிறார்கள். என்னவென்று சொல்ல நேரவிரையம் செய்தும் எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் தெரியாத ஆட்கள் இன்னமும் இருக்கிறார்கள்

பெண் தேடும் படலம்

”என் பெயரோ கல்யாணராமன் மங்களகரமான பெயர். ஆனால் எனக்கோ இன்னம் திருமணம் ஆகவில்லை” இது என் நண்பனின் புலம்பல்.
இதில் வேறு அவனது கோபம் எல்லாம் அவனது ஜாதகத்தின் மீது தான்.

எவண்டா இந்த ஜாதகம் ஜோசியம் அப்படிங்கறத கண்டுபிடிச்சது. என்பதே.

இந்த கல்யாணராமனுக்கு என்ன தான் பிரச்சினை என்று பார்த்தால் இவன் பிறந்த நேரம் ஒரு நிமிடம் தாண்டினால் செவ்வாய் தோஷம் இல்லை.

அவனது ஜாதகத்தில். இந்த லட்சனத்தில் அவன் பிறந்தது இந்த நேரம் தான் என்று அவன் அப்பா சொல்கிறார் அவன் பாட்டியோ இல்லை அவன் 3 நிமிடம் கழித்து தான் பிற்ந்தான். 3 நிமிடம் கழித்தால் தோஷம் கிடையாது. இது தான் அவன் பிரச்சினையே.

நான் கூட கேட்டேன் அது எப்படி டா மாறும் என்று. அதற்கு அவன் சொன்னது புத்தரின் கதை எனக்கு என்னவோ போல் இருந்தது. இதில் இவ்வளவு விசயம் இருக்கிறதா என்று

அது என்ன கதை என்றால்

புத்தர் பிறந்த போது மாடியில் இருந்து ஒரு முத்தை எடுத்து கீழே போட்டார்களாம். அந்த முத்து ஒரு கதவின் மீது பட்டு கீழே விழுந்ததாம். கீழே விழுந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணித்தவர்கள் சொன்னது இவர் பெரிய சக்ரவத்தி ஆவர். உலகத்தையே ஆள்வார் என்பது. ஆனால் கதவில் பட்ட ஓசையை கேட்டு ஒருவர் எழுதிய ஜாதகப்படி புத்தர் பெரிய ஞானி ஆவார். உலகத்தில் இவர் ஆண்மீகவாதியாக பற்றற்று இருப்பார் என்பது தான்.

இப்படி இருக்க சரியான பிறந்த நேரம் இல்லாமல் என் நண்பர் கல்யாணராமன் கவலைபடுவது சரிதான் என்று தோன்றியது.

இருப்பினும் ஜாதகம் பார்க்காமல் நேரம் பார்க்காமல் எத்தனையோ பேர் திருமணம் செய்திருக்கிறார்கள் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள். அது எப்படி சாத்தியம் இது ஒரு புரியாத புதிராக இருந்தாலும்.

இந்த கதை எனக்குள் ஒரு புரிதலை உண்டாக்கியது.

உலகத்தில் பிறந்த அத்தனை பேருக்கும் சரியாகதான் ஜாதகம் குறிக்கப்பட்டுள்ளதா. அறுவைசிகிச்சை மூலம் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் பார்ப்பது என்பதே.

ஆக இந்த ஜாதகம் ஜோசியம் பார்க்காமல் நடந்த திருமணம் நல்லதாகவே இருக்கும்பட்சத்தில் ஏன் இந்த திருமண பொருத்தமும். ஜாதகமும்.

இன்று கல்யாணராமன் காதலித்த செவ்வாய்தோஷம் இல்லாத பெண்ணை திருமணம் செய்ய தீர்மாணித்துவிட்டார். அவர் எண்ணம் நடக்க வாழ்த்துகள்