விளையும் பயிர்


படிப்பிற்கும், திறமைக்கும் வயது கிடையாது. எந்த வயதிலும் படிக்கலாம் எத்தனை வயதானாலும் படிக்கலாம் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் திறமையை வெளிக்காட்ட வயது முக்கியமா? முக்கியமில்லையா? என்று கேட்டால் அதற்கு மட்டும் பதில் இவர்களிடமிருந்து எளிதில் வராது. அப்படியே வந்தாலும் மிகப் பெரிய யோசனைக்கு பிறகு தான் பதிலே.


அப்படிப்பட்ட கேள்விக்கு இந்த படத்திலிருக்கும் சிறுவனே பதில்.
( தந்தையுடன் மகன்) 

மயிலாடுதுறையில் நடந்த ஓர் திருமண நிச்சயதார்த்த விழாவில் தவில் ஆசிரியர் திரு. பாலசுப்ரமணியன் அவர்களின் எட்டு வயதே ஆன மகன்
திரு. முத்துகுமார் (எ) சரத் வாசித்த தவில் கச்சேரி தான் வெகுவிமர்சை. 
திருமண நிச்சயத விழாவிற்கு  வந்திருந்த விருந்தினர்கள். இந்த மணமக்களை பார்த்தார்களோ இல்லையோ இந்த சிறுவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள். இந்த விழாவில் விழாநாயகனாக விளங்கிய முத்துக்குமாரை பார்த்தாலே தெரியும். திறமைக்கு வயது முக்கியமா? முக்கியமில்லையா? என்று.

இனி சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும் சிறுவர்களிடம் சைக்கிள் உயரமே இல்லை நீ எப்படி கற்றுக்கொள்முடியும் என்று யாரும் கேட்க முடியாது. 
ஏனென்றால் தவில் எடையே இல்லாத ஒருவன் தவில் வாசிக்கும் போது நான் சைக்கிள் உயரம் இருந்தால் தான் ஓட்டமுடியுமா என் எதிர் கேள்வி கேட்டாலும் கேட்பர்.