எங்களது பக்கத்து ஊரில் ஒரு இட்லிகடை வைத்து பிழைப்பு நடத்திய ஓர் குடும்பம் இருந்தது. அந்த கடை ஓர் ரோட்டோர இட்லிகடை. அந்த கடையின் முதலாளி ரதியக்கா. இவர் ஓர் கைம்பெண். இந்த ரதிஅக்காவிற்கு இரு பெண் குழந்தைகள் அதில் ஒரு பெண் குழந்தை ஆறாவதும் மற்றோர் பெண் குழந்தை இரண்டாம் வகுப்பும் படிக்கிறார்கள்.இவரது கணவர்
இரண்டு வருடங்களுக்கு முன்பு மதுவின் தாக்கத்தால் கமாண்டிங் ஹலுசினேசன் என்ற மனசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு மனநோயாளியாகி தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார். இவர் ஓர் கூலி தொழிலாளி.
திருமணமான புதிதில் ரதிஅக்கா பெயருக்கேற்றாற்போல் நல்ல அழகாக தான் இருந்தார்கள். ஆனால் தற்போது அவர்களத கோலமே மாறிவிட்டது.
கணவர் இழந்த இந்த அக்கா கைம்பெண்களுக்காக உரசு தரும் உதவி தொகை வாங்க இருந்த நேரத்தில் அரசு பலருக்கு உதவிதொகையை நிறுத்தியிருந்தது. அதனால் தனக்கு எங்கு நிதியுதவி கிடைக்கும் என்று வெறுத்து மனு போடாமல் இருக்கிறார்.
இரு பெண்குழந்தைகளையும் கரை சேர்க்க வேண்டுமே என்று தனக்கு தெரிந்த கமையல்வேலையான இட்லி சுட்டு பிழைப்பு நடத்தி வந்தார். விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலைஉயர்வு, பேருந்துகட்டண உயர்வு என பல விலைஉயர்வுகளையும் உள்வாங்கி கொண்டு குறைந்த லாபம் கிடைத்தால் போதும் என்று இட்லி வியாபாரம் நடத்தி வந்தார்.
இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் சிலர் வீணாய் போன வீணர்கள் மது போதையில் வந்து விலையில்லா இட்லி கிடைக்குமா என்று வெட்டியாய் வம்பு வளர்ப்பதும் உண்டு.
அதையும் சகித்து கொண்டு பெண்பிள்ளைகளை கரை சேர்க்க வேண்டுமே என்று பிழைப்பு நடத்திவந்தவருக்கு திடீர் இடியாய் வந்து இறங்கியது அம்மா உணவகம்.
இதனால் பிழைத்த பிழைப்பு போய் வேறு தொழில் நடத்த தயாராகிவருகிறார்கள் இந்த அக்காவின் குடும்பம்.
அடுத்து அவர்கள் நம்பி இருப்பது .......................
இது போல் எத்தனை ரதி அக்காக்களோ.
இது போல காட்சி மாற வேண்டுமானால்
மாறவேண்டும்.......
விடியட்டும்