நான் மயிலாடுதுறையில் ஜேசீஸ் என்ற அமைப்பில் உறுப்பினராக உள்ளேன். இந்த அமைப்பின் சார்பாக நடைபெற்ற தேர்தல் விழிப்பணர்வு பிரச்சாரத்திற்கு
திட்ட இயக்குனராக நான் அமர்த்தப்பட்டேன்.
அந்த பிரச்சாரம் மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டிருக்கும் மாதிரி வாக்குசாவடியில் இருந்து துண்டுபிரசுரங்கள் வெளியிட்டு கடைவீதி முழுமையும் தருவதாகவும். முடிந்தால் அந்த மாதிரி வாக்குசாவடியில் ஏதாவது பணி செய்யலாம் என்று தான் முடிவு செய்திருந்தோம்.
ஆனால் எங்களால் துண்டு பிரசுரங்கள் மட்டும் தான் வெளியிட முடிந்தது. அந்த துண்டு பிரசுரத்தில் கீழ்கண்ட வாசகங்கள் தான் இடம்பெற்றிருந்தது.
வாக்காளர் என்பதில் பெருமைபடுவோம். நாம் வாக்களித்து கடமையாற்றுவோம். நமது எதிர்கால குரல், நமது வாக்கு அதை சரியாக பயன்படுத்துவோம். நாம் வாக்காளர் என்பதை அடையாளப்படுத்துவோம், வாக்களிக்க தயாராக இருப்போம். மனதில் உறுதிவேண்டும், மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும். நோட்டுக்காக ஓட்டல்ல, ஓட்டை விற்காதீர்..
நமது வாக்கு நமது உரிமை.....