கம்யூனிச மணல் வீடு
சிறு குழந்தைகள் கடற்கரையில் வீடுகட்டி விளையாடுவார்கள் நாம் பார்த்திருப்போம். ஒரு குழந்தை அதை கட்டி முடித்துவிட்டு சந்தோசமாக இருந்தாலும் வேறு யாரும் அதை இடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் பார்த்துகொண்டிருக்கும். அது நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நினைத்து அதை கவனித்துகொண்டிருக்கும்.
அப்படியே கவனித்தாலும் யாரும் அதை இடித்துவிடுவார்கள், இந்த கதை குழந்தைகளுக்கானது மட்டுமல்ல மிகப்பெரும் அரசியலுக்கும் அரசியல் சிந்தாந்தத்துக்கு உண்டானதும் கூட.
பொதுவுடைமை கட்சி என்று கூறப்படும் கம்யூனிஸ்ட் கட்சியும் இப்படிப்பட்ட நிலைமையில் தான் இருக்கிறது.
ரஷ்யாவில் இன்று கம்யூனிசத்திற்கு பின் எங்கும் லஞ்சம் ஊழல் விபச்சாரம் என கொடிகட்டி பறக்கிறது. ரஷ்ய கம்யூனிசம் தோல்வியில் போய் நிற்கிறது. சீன கம்யூனிசம் பரவாயில்லை. என்ன பெரிய வித்தியாசம் என்றால்.
ரஷ்ய கம்யூனிசம் கட்சியே அரசை கட்டுப்படுத்தும், ஆனால் சீன கம்யூனிசம் கட்சி வேறு அரசு வேறு என்று இருக்கும். ஆனால் பெரும்பாலும் கட்சியினரே அரச பதவியை வகிப்பர்.
சீன கம்யூனிசத்தை போல கேரள கம்யூனிசமும், ரஷ்ய கம்யூனிசத்தை போல மேற்குவங்க கம்யூனிசமும் இருக்கிறது.
தற்போது மேற்குவங்க கம்யூனிசம் தள்ளாட்டத்தில் தான் உள்ளது.
கம்யூனிசம் மேலும் வளச்சி காதையில் செல்ல எந்த ஊர் கம்யூனிட்டாக இருந்தாலும். உண்மையான கம்யூனிட்டாக இருக்க வேண்டும்.
அப்படின்னு ஒரு தோழர் என்னிடம் புலம்பிகொண்டிருந்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)