கொல்லி மலையில் இருக்கும் இந்த தெய்வம் தான் கொல்லி பாவை.

அசுரர்களை தன் வசிய பார்வையால் கவர்ந்து கொல்லும் என்ற பொய்யை இன்னமும் பரப்பி வருகிறார்கள். அது போல இதுவரை யாரையும் கொன்றதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை.

புராண, இதிகாசங்களில் தென்னாட்டவரை அசுரனாகவும், வடநாட்டவரை தேவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது தென்னாட்டில் இருக்கும் நம்மை எப்படி பாவை அழித்திருக்கமுடியும்.

சித்தர்களுக்கு வரங்களை வழங்கும் இந்த தெய்வம். இன்னமும் பல சித்தர்களுக்கு வரம் வழங்கிகொண்டு தான் இருக்கிறது.

சித்தர்களா அதுவும் இந்த காலத்திலா என்று நீங்கள் கேட்கலாம், ஆம் இருக்கிறார்கள், ஜீன்ஸ் டீசர்ட் போட் சித்தர்கள் நம்மிடம் கலந்து தான் இருக்கிறார்கள்.

இனம் காண்பதில் தான் இருக்கிறது.

நண்பர்களுடன்


இது நானும் எனது நண்பர்களும் தான் என் தோழி நீலா அவர்களின் வீட்டிற்கு சென்ற போது எடுத்தது. நண்பர்களுடன் முதலில் வெளி ஊர் சென்ற அனுபவம். அப்போது ஆரம்பித்த பயணம் இன்னமும் தொடர்கிறது.

அவர்கள் வீட்டில் பிடித்ததே அவர்கள் வீட்டில் இருந்த சின்ன சின்ன வாண்டுகள் தான். அவர்களோடு விளையாடினால் பொழுது போனதே தெரியவில்லை தான்.

எனக்கு தெரிந்த சின்ன சின்ன மேஜிக் செய்து அவர்களை மகிழ்ச்சியடைய வைத்தேன்.

பின் அவர்களுடன் ஒரு ஜாலி டிரிப்.

அப்படியே சின்ன சின்ன விசயங்களை சொல்லி கொடுத்தேன்.

இதில் இருக்கும் எனது நண்பர்கள் மதன், தண்டபாணி, சக்தி, இளங்கோ, வடிவேல், தவசு, ஷேக், சுப்ரமணி, மற்றும் சௌம்யா நடுவில் நீலகலர் டிரஸ்சில் நான்.

இது ஒன்று தான் நான் கல்லூரி நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோ

அண்ணா து(ரை)றை

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கிணங்க குறைவான உயரம், குள்ளமான உருவம், ஆணால் குணமான உள்ளம்.

மாற்றான்தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்று மற்றவரையும் மதிக்கும் குணம்.

மறப்போம், மன்னிப்போம் எனும் எண்ணம் இது மட்டுமல்ல இன்னமும் பல நல்லனவற்றை சொல்லலாம் அறிஞர் அண்ணாவை பற்றி.

திராவிட கட்சிகள் இவரின் பெயர் இல்லாமல் இயங்காது.

அப்படிபட்ட அரசியலில் அசைக்க முடியாத ஏன் மறக்க, மறுக்க முடியாத அச்சு அண்ணா.

அண்ணா சொன்ன ஒன்றே குலத்தையும் மறந்து ஒருவனே தேவன் என்பதையும் மறக்கவில்லை மக்கள் ஆணால் அந்த ஒருவன் யார் என்பதில் தான் பிரச்சினையே.

அதற்குண்டான பதிலை அண்ணா அவர்களே சொல்லிவிட்டார். ஏழையின் சிரிப்பினில் இறைவனை காணலாம் என்று, இருந்தாலும் இன்று ஏழைகள் சிரிப்பு என்பது கேள்விக்குறியதாகிவிட்டது.

ஆக பெரியார் சொன்ன கடவுளை ஒழிக்கவேண்டும் என்பதற்கும், அண்ணா செய்த ஆட்சிக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது.

பெரியார் சொன்ன கடவுள் மறுப்பிற்கு ஏழைகள் மறுப்பு என்று எடுத்துக்கொள்வோம். தமிழ்நாட்டில் ஏழைகள் என்பதை ஒழிக்க பாடுபட்டார் அண்ணா. ஆக பெரியாரும் அண்ணாவும் வெவ்வேறானார்கள் என்றாலும் போன பாதை ஒன்றே தான். புரிந்தவர்களுக்கு.

ஆக இதனை கட்சிகள் புரிந்துகொண்டு செயல்படட்டும். இதற்கு தனி துறை வேண்டாம். அண்ணாதுரையின் அந்த துறை அதாவது அண்ணா துறையே போதும்

அன்பே சிவம்


அன்பே சிவம் என்றவுடன் இது கமல் பட டைட்டில் அப்படின்னும் அன்பே சிவம் பாடலும் தான் பலருக்கு அது தான் நினைவுக்கு வரும், ஆணால் நான் நேரில் கண்ட காட்சி,

நாத்திகம் பேசும் நல்லவருக்கு அன்பே சிவம், ஆத்திகம் பேசும் அடியாருக்கு சிவமே அன்பு என்பதற்கினங்க ஊர் சம்பவம்.

பிரதோஷ காலத்தில் பிரதோஷ விரதம் எடுத்து கோவிலுக்கு போய் வந்த சில அன்பர்கள் தெரு முனையில் ஓர் வீட்டில் வயதான ஒருவர் மாரடைப்பில் தவித்துக்கொண்டிருக்க, அதை கண்ட அந்த பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்கு போயிட்டு அடுத்தவர்கள் வீட்டிற்கு சென்றால் அந்த புண்ணியம் அந்த வீட்டிற்கு போய்விடும் எக்று போகாமல் விரைவாக தன் வீட்டிற்கு செல்லும் போது ஒருவர் மட்டும் கோவிலுக்கு அருகிலிருந்து, அந்த வயதானவர் வீட்டிற்கு நுழைந்து அவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்று காப்பாற்றினார்.
அவரை பற்றி விசாரித்தில் அவர் ஓர் நாத்திகர் என்றும், அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் தெரியவந்தது.
சிவமே அன்பெனதை விட அன்பே சிவம் மேல் என்ற உணர்வு ஏற்பட்டது அன்று

அடிமை

மனிதர்கள் சிலரில் பிறரை அடிமையாக வைத்திருப்பதும், தன் பேச்சை மட்டும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதும் இயல்பே,

அப்படி இருப்பது தான் தனக்கு கௌரவம் என்றும் பெருமை என்றும் நினைப்பு இன்னமும் இருந்துகொண்டு தான் இருக்கிறது.

அப்படி பட்ட நினைப்பில் ஆரம்பம் அல்லது குறைந்தப்பட்சம் தான் வீட்டில் செல்லபிராணிகள் வளர்ப்பது ( அது தன் பேச்சை கேட்டும் என்ற எண்ணத்தில்)

அப்படி வளர்க்கபடும் விலங்குகள புரட்சி பாதையை நோக்கி திரும்பமுடியாது. கூட்டம் கூட முடியாது. தனது விடுதலைக்காக புரட்சி பாதையை நோக்கி முன்னேறினால் அவ்வளவே, இந்த விலங்குகளுக்கு.

அது போல தான் இன்னமும் சில நாடுகளில் இருக்கிறது. அங்கு விலங்குகள் கூட மகிழ்ச்சியாக இருக்கிறது, ஆணால் மகிதர்களின் நிலை தான் தலைகீழ்.

நம் நாட்டில் அது போல் இல்லை என்றாலும், இருக்கலாமோ என்ற சந்தேகத்தை வளர்க்க வேண்டாம்.

சித்தன்


சித்தர்கள் என்று நம்மாள் அழைக்கப்படும் அந்த நபர்கள் மனித இனத்தின் மீதும் மனித சமுதாயத்தின் மீதும் அதீத பற்று கொண்டு பல ரகசியங்களை உலகிற்கு எடுத்துகூறி மனித வாழ்க்கையை மேம்படுத்தியவர்கள்.

இவர்கள் ஆசையை முழுதும் ஒழித்தவர்கள் அல்ல.

மனித சமுதாயம் மேம்படவேண்டும் என்ற ஆசை உடையவர்கள்.

ஆசையே இல்லாதவன் தான் சித்தன் என்று கூறமுடியாது. ஆசைபடுபவனும் சித்தன் தான்.

அந்த ஆசை எப்படிப்பட்டது என்பதை பொறுத்து இருக்கிறது.

தேவையற்ற ஆசையை வைத்து கொண்டு இன்பம் துன்பம் இரண்டையும், சமமாக பாவிக்க முடியாது.

அப்படி சமமாக பாவிக்க ஆசையை தேவையுள்ள ஆசையாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

அப்படி அந்த ஆசையை பகுத்தறிந்து, இனம் கண்டவர்கள் அனைவருமே சித்தராவதற்கு தகுதியுள்ளவர்களே

உண்மை கதாநாயகர்கள்


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த கதாநாயகன், நகைச்சுவைக்கும், அதிரடி சண்டைகாட்சிகளிலும் கலக்கும் கதாநாயகன் யாருன்னு குழந்தைகளுளிடம் கேட்டால் கூட சொல்லும் அது ஜாக்கிசான் தான் என்று.

அப்படிப்பட்ட ஜாக்கிசானும் தன்னை விட சிறந்த கதாநாயகனாக ராணுவத்தினரையும், தீயணைப்பு துறையினரையும் சொல்கிறார்.

ஜாக்கிசான் சினிமாவிற்காக ரிஸ்க் எடுக்கிறார். ஆணால் இவர்கள் பிறர் வாழ்க்கைக்காக ரிஸ்க் எடுக்கிறார்கள்.

அப்படிப்பட்ட தீயணைப்புத்துறையினருக்கு சமுதாயத்தில் பெரிய பெயர் மக்களிடம் இல்லை, அவர்கள் நமக்காக சிரமப்படுகிறார்கள் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லை. இவர்கள் வண்டி சாலையில் சென்ளால் தண்ணி வண்டி போகுது என்னு கிண்டல் செய்யும் மடையர்கள் இருக்கிறார்கள்.

தீயணைப்பு வண்டி வருகிறது என்று வழிவிட்டு செல்லாதவரை என்ன செய்ய.

காவல்துறையினருக்கு கொடுக்கும் மரியாதை இந்த நிஜ கதாநாயகர்களுக்கு இல்லை.

நம் உயிரையும் உடைமையையும் தன்னுயிரை பணையம் வைத்து காப்பாற்றும் இந்த வீரர்களை போற்றுவோம். மதிப்போம்.