தமிழக ஆட்சியின் நிலை

சமீபத்தில் ஒரு விளம்பரம் பார்க்க நேர்ந்ததது. அதில் ஒரு  சீனத்து உணவகத்தில் நமது இந்திய பிரஜை உணவருந்த செல்வார். அதில் பாஷை புரியாமல் எதை சாப்பிடுவது என்பதை சொல்ல தெரியாமல் ஏதோ ஒரு உணவை ஆர்டர் செய்வார். அவர் ஆர்டர் செய்த உணவு ஓர் அருமையான அசைவ உணவு. திருப்தியாக சாப்பிடுவார்.அதை அவர் சாப்பிட்டு முடித்து அது என்ன உணவு என்று அந்த சர்வரிடம் சைகை மூலம் பக் பக் பக் என்று கேட்பார். அவர் கேட்டதற்கு என்ன அர்த்தம் என்றால் அது வாத்தா என்பதாகும். ஆனால் அந்த சர்வர் சொன்ன பதில் அவருக்கு இடியே தலையில் விழுந்தது போல் இருந்தது. அதாவது சர்வர் சொன்ன பதில் லொள் லொள். என்னன்னா அவர் சாப்பிட்டது நாய் என்பதாகும்.
அது போல் தான் உள்ளது நமது ஆட்சியின் நிலை. நாம் பசியை போல் ஆட்சி அமைத்தால் அந்த ஆட்சி நமக்கு வாத்துகறியை போல் உணவளிக்காமல். நாய் கறியை போல் உணவளிக்கிறது. நமது தேர்த்தெடுத்த லட்சனம் அப்படி. என்னசெய்வது. விட்டால்
துக்ளக் தலைநகரை மாற்றியதை போல் இன்னும் சிறிது நாட்களில் நமது தலைநகர் கொடநாட்டுக்கு மாறினாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை.
ஜாக்கிரதை.

நித்தியானந்தர்

நித்தியானந்தா

சாதாரண மனிதர் இன்று பல சர்ச்சைகளுக்கு உட்பட்டு ஒரு ஆதினத்தில் இளைய தலைவர்.

கதவை திற காற்று வரட்டும் என்றவர் கதவை மட்டும் திறந்து வைத்திருந்தால் இவ்வளவு பிரச்சினைக்கும் ஆளாக வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.


வாயையும் சற்றே மூடி வைத்திருக்கலாம். தான் செய்தது தவறு என்று தெரிந்தும் அதை நியாயப்படுத்த முயற்சிக்கும் அவருடைய முயற்சியை என்னவென்று சொல்ல.

கோயபல்ஸ் கூட தோற்றுவிடுவார் போல.

தப்பா தவறா

ஒரு படத்துல பிரகாஷ்ராஜ் சொல்லுவார். துரோகம் இரண்டு வகைபடும் ஒன்று நமக்கு நாமே செஞ்சிக்கறது. மற்றொன்று நாம் பிறருக்கு செய்வது.

நமக்கு நாமே செஞ்சிக்கிறது. சிகரெட், தண்ணீ, மற்ற போதை பொருட்கள்.

உலகில் பிறந்த அனைவரும் ஏதோ ஒரு வகையில் சைக்கோ என்பது போல் உலகில் பிறந்த அனைவரும் ஏதோ ஒரு வகைக்கு அடிமை தான்.

அடிமைத்தனம் மற்றும் பழக்கவழக்கம் சைக்கோவாகிறது.
அது யாராக இருந்தாலும் சரி. பாரதிக்கு போதை பொருள் பழக்கம் இருந்தது. காந்திக்கு இனிமா கொடுத்துகொள்ளும் பழக்கம் இருந்தது. அது போல் நேருவுக்கும் சிகரெட்.

ஆக உலகில் மனிதன் ஏதோ ஒன்றிற்கு அடிமையாகி கொண்டு தான் இருக்கிறான்.

இந்த பழக்கம் ஆழ்மனதில் ஏற்படுகின்ற இறுக்கத்திற்கு இதுஒரு வடிகால் என்பது உளவியலாளர்கள் கருத்து.

ஆக இது நமக்கு நாமே செய்துக்கொள்ளும் துரோகம் என்றாகாது. சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். இது தவறு தான். ஆனால் சிகரெட் அளவுக்கு அல்ல என்றாலும் இதுவும் ஒரு சைக்கோதனம் தான்.

இந்த பழக்கத்தால் உடல் தான் பாதிக்கப்படுகிறது. மனம் அல்ல. என்பது பொதுவானதானாலும். உடல் பாதித்தால் மனமும் பாதிக்கும் என்பது பொது கருத்து.

இந்த சைக்கோ தனத்தை கட்டுப்படுத்தினால் அது மற்றோர் பழக்கத்திற்கு தான் எடுத்துசெல்லும்.

படிப்பதற்கு முக்கிய தேவை

நமது நாடு ஒரு ஜனநாயக நாடு என்பதில் நாம் பெருமைபட தான் வேண்டும்.

ஆனால் அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுடன் மிக அடிப்படை தேவையான கல்வி சரியாக கிடைக்கிறதா என்பது இன்றைக்கு கேள்ளிகுறி தான்.

பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்காமல், எடுக்கமுடியாமல் ( பல சந்தர்ப சூழல்களால்) குறைந்த மதிப்பெண் எடுத்து விரும்பிய துறை கிடைக்காமல் பல மாணவர்கள் மனதாங்களுடன் படிக்கிறார்கள்.

ஒன்று மதிப்பெண் இருக்க வேண்டும் அல்லது பணம் இருக்க வேண்டும். இது இரண்டும் இல்லாதவர் பாடு திண்டாட்டம் தான்

அதிக மதிப்பெண் எடுக்க எனக்கு தெரிந்த புரோட்டா மாஸ்டர் கிடைத்த நேரத்தில் ராப்பகலா கண்விழித்து படித்து நோய் வந்தது தான் மிச்சம்.

ஆக அவர் அதிக மதிப்பெண்னும் எடுக்கவில்லை, மேற்கொண்டு படிக்க பணமும் இல்லை.

இந்த தொல்லைக்கு படிக்காமலே புரோட்டா போட்டு நன்கு சம்பாதித்திருக்கலாம். அவர்.

குறைந்த மதிப்பெண் எடுத்தால் அவனுக்கு உள்ள திறமைக்கு ஏற்றாற்போல் படிக்கமுடியாத சூழல் தான் நிலவுகிறது.

பணம் இருந்தால் படிக்கலாம் என்பது இன்று சொல்லாமல் சொல்லப்படுகிறது.

இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய. மெட்ரிக்குலேசன் போன்ற தனியார் பள்ளி, கல்லூரி வைத்திருப்பவர்கள் இந்த படிப்பை வைத்துக்கொண்டு சம்பாதித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

படிப்பது முக்கியமல்ல பணம் சம்பாதிப்பது தான் முக்கியம் என்பது சமுதாய கருத்து. படித்து முடித்துவிட்டு சம்பாதிக்க தானே போகிறார்கள். அது தான்.

ஆகவே இது ஜனநாயக நாடு தானே.

அச்சுக்கலை


தமிழ் பொதுவாகவே மூன்றாக பிரிக்கப்படுகிறது.
அது பின்வருமாறு

இயற்தமிழ் - இது இலக்கண, இலக்கியங்களுக்காகவும்
இசைதமிழ் - இசை மூலமாக தமிழ் வளர்ச்சிக்கும்
நாடக தமிழ் - இது நாடக கலையின் மூலம் தமிழ் வளச்சிக்குமா சங்க காலம் தொட்டு இந்த காலம் வரை பேப்படுகிறது.

இருந்தாலும் நவநாகரீக உலகத்தில் தமிழ் இணையம் மூலமாகவும், அச்சு காகிதம் மூலமாகவும் பரவி வருகிறது. அதற்காக இதனை நான்காம் தமிழ் என அழைக்கபடாது.

நவீன உலகின் புதிய முறை எனலாம்.

இந்த நவீன உலகில் இணையம் பிரபலமாக இருந்தாலும். அச்சு முறை தான் இன்னமும் தனது ஆதிக்கத்தை செலுத்திவருகிறது.

ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை இந்த அச்சுகலை பணி செய்துக்கொண்டிருக்கிறது.

பாரதி சொன்னது போல் மற்ற நாட்டு கலையை இங்கு கொண்டு வந்து புதுமை படைப்பதில் இந்த அச்சு கலை அப்படியே இருக்கிறது.

போர்ச்சுகீசிய ஜான் கூட்டன் பர்க்கால் உருவாக்கபட்ட இந்த அச்சுகலை இன்று பல மாறுதலுகுட்பட்டு புதிய சகாப்தமாக, ஆப்செட் பிரிண்டிங், மல்டிகலர் பிரிண்ட்டிங், டிஜிட்டல் பிரிண்டிங் என அரிதாரம் பூசி அழகாக பவனி வருகிறது.

மாணவர்களுக்கான பாடநூல் முதல் பல அறிவுசார் விசயங்களை தனது அச்சின் மூலம் வெளிக்காட்டி தமிழை வளர்த்து வருகிறது.

பேச்சு வழக்கில் நாம் தமிழை பேசுவது குறைந்தாலும். இந்த அச்சிடப்பட்ட தமிழ் புத்தகங்களின் மூலமாகவும் நாம் தமிழை தமிழாக உச்சரிக்க வழிவகை செய்கிறது.

இந்த கலை தமிழ் வளர்ச்சிக்கு பெரிய படிக்கலாக இருந்தாலும்,

அச்சத்தார் தன் கடமையை கடைமையே என செய்யும் போதும், வியாபார போட்டிக்காக இந்த அருமையான கலையை குறைத்து மதிப்பிடுவதாலும், மக்கள் தமிழை முழுமையாக பயன்படுத்தாது பெருங்கவலை தான்.

இந்த கவலையுடன் அச்சுக்கலை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.

உலக பார்வைக்கு

கலிலியோ உலகம் உருண்டை என்று சொன்ன போது நம்பாத உலகம், அவரை கேலப்படுத்தி, அவமானபகடுத்தியது.

பிறகு உலகம் உருண்டை என்று நம்பும் போது பைபிளில் உள்ள வாசகம் தவறு என்று ஒப்புக்கொண்டது.

அறிவியல் பூர்வமான நிறுபிக்கட்ட அனைத்தையும் நம்பிய மனிதன், நிறுபிக்கபடாததை கடவுளின் கிருபை என்றும் கடவுளாகவும் கூட நம்பினான் நம்பிக்கொண்டிருக்கிறான்.

ஒவ்வொரு அறிவியல் விளக்கத்திற்கும் கூட புதுக்கடவுள் அவதாரம் என்று பெயர் வைத்துவிட்டான்.

அம்மை நோயை மாரியம்மனாகவும், காலரா நோயை காளியம்மனாகவும் நினைக்கும் மக்கள், நோய் வந்தால் மட்டும் பயந்து ஒதுங்குகிறார்கள்.

ஆக காலராவை ஒழித்துவிட்டதாக சொல்லும் மருத்துவர்கள்,
காளியம்மனை அழித்துவிட்டார்களா என்ன.

கடவுள் இருக்கிறார் என்றால் அவரை கண்டபடி வேறு எதனோடும் ஒப்பிட்டு கேவலப்படுத்தவேண்டாம்.

ஐசு, ஐசு....................

ஐஸ்வர்யா ராய் இது இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஓர் மந்திரவார்த்தையாக தான் இருந்தது.

இந்த பெயரை கேட்டாலே வடிவேலு ஒரு படத்தில் ஐஸவர்யாராய அம்மாவாக்கி அவங்க அம்மாவ மாமியாராக்கனும்னு சொல்ற காமடி தான் நினைவுக்கு வருகிறது.

இந்த படத்தை பார்த்தால் அதே வடிவேல் அந்த வார்த்தையை சொல்லியிருப்பாரா என்பது சந்தேகம் தான்...

ஆக மொத்தம் மனதை பார்த்து கல்யாணம் செய்வது என்ற நிலைப்பாடு காணாமல் போய்விட்டது.

முன்பெல்லாம் பெண்ணை மணமகனுக்கு கண்ணில் காட்டாமல் நல்ல மனசு பெண் என்றும் நல்ல அழகு என்றும் மணமகனின் தாயார் சொல்லி திருமணம் செய்தார்கள்.

இன்று அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் நபர்கள் தான் முன்னிலையில் இருக்கிறார்கள்.

என்றும் நிலையில்லாதது இந்த அழகு என்று தெரிவிப்பதற்கு இந்த ஐசே உதாரணம்,

உடல் பருமனாகிவிட்டது என்பதற்கு இது அழகு இல்லை என்று ஆகிவிடாது. இருந்தாலும் அந்த ஒல்லியாக தேகத்தையும், அந்த கண்ணையும் அழகு என்று சொன்னவர்கள், அந்த ஒல்லி தேகத்தை தேடவேண்டிய கால கட்டத்தில் உள்ளார்கள்.

ஆக புறஅழகுக்கு முக்கியத்துவம் தராமல் அகஅழகுக்கு முக்கியத்துவம் தாருங்கள்