சரியான முடிவு

நாம வாழ்க்கையில எடுக்கற முடிவும் எடுக்கபோற முடிவும் சரியா தப்பா அப்படின்னு முடிவு பன்றதுக்குள்ள அந்த விசயம் முடிஞ்சி போயிடுது.

அப்ப எப்படி தான் சரியான முடிவு எடுக்கறது என்பது தான் முதல் கேள்வியா நம்மிடம் இருக்கும்.

இது ஒன்னும் பெரிய விசயம் இல்ல, நாம எடுக்கற முடிவு தப்பில்ல அப்படின்னு நினைச்சாலே அது சரியா தான் இருக்கும்.

ஆனாலும் சரி தவறு இரண்டும் பார்வைக்கு ஒன்னா தான் தெரியும். மேல உள்ள எழுத்த போல.  அத ஆராய்ச்சி நோக்கோடு பார்த்தா இனம் காணலாம்.

நாம எடுக்கற முடிவு சரியா இருக்கனும்னா அது

  •  உண்மையான முடிவா இருக்கனும்
  • நம்பிக்கையான முடிவா இருக்கனும்
  • தைரியமான முடிவா இருக்கனும்
இப்படி இருந்தா அது சரியான முடிவு தான்

சர்க்கஸ்காரர்கள்

கரணம் தப்பினால் மரணம் இது தமிழ் பழமொழி.

இன்று நாம் பலர் நம் வாழ்க்கையை இப்படி தான் நகர்த்திகொண்டிருக்கிறோம்.

ஆனாலும் மயிலாடுதுறையில் கூடாரம் அடித்திருக்கும் சர்க்கஸ்காரர்களை பார்த்தால் இது உண்மை என்று தெரியவரும்.

பிறரை சந்தோஷப்படுத்த தன் உயிரை பணயம் வைத்து விளையாடுகிறார்கள்.

அப்படிபட்ட சர்க்கஸ் கலைஞர்களை ஆதரிக்க வேண்டியது நம் கடமை தான்.
சினிமாவில் டூப் போட்டு சண்டை போடும் கதாநாயகர்களுக்கு கரகோஷம் எழுப்பி ரசிகர் மன்றம் வைக்கும் நாம் இவர்களை சட்டை செய்வதில்லை தான்.

பிறர் சந்தோஷத்திற்காக உடலை வருத்தி உழைக்கும் இவர்களை பாராட்டாமல் இருக்கலாமா

விளையாட்டு குழந்தைகள்

விளையாட்டு இன்று இளைஞர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கிறார்கள்.

இந்த விளையாட்டின் மூலம் மனதும் உடலும் வலிமையாகும் என்பதனை மறந்துவிடுகிறார்கள்.

விளையாட்டில் தோல்வியை சந்தித்த குழந்தைகள் வாழ்க்கையில் சிற்சில தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் அடைவதாக இன்றைய விஞ்ஞானம் குறிப்பிடுகிறது.

அந்த விளையாட்டு கணிணியில் விளையாடும் விளையாட்டோ அல்லது தொலைகாட்சியில் விளையாடும் விளையாட்டோ அல்ல.

களத்தில் இறங்கி விளையாடும் குழந்தைகள் வியர்வை வெளியேறி சோர்வடைந்து பின்பு ப்ரஷாக ஆவது. அவர்களது உடலையும் மனதையும் கட்டுப்பாக வைத்திருக்கும்.

2ஆம் உலக போரின் போது சாப்லின் ஒரு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் அந்த போராட்டத்தின் வாக்கியமே குழந்தைகள் வீதியில் இறங்கி விளையாட முடியவில்லை. போரை நிறுத்துங்கள் என்பது தான்.

ஆக அவரின் எண்ணம் போர் அல்ல குழந்தைகள் வாழ்க்கையும், அவர்களது மனநலனும் பாதிக்க கூடாது என்பது தான்.

குழந்தைகள் வீட்டிற்குள்ளயே விளையாட விடாமல், வெளியில் போய் விளையாட அனுமதி கொடுத்தாலும். அவர்கள் வீட்டை விட்டு வெளியேற முற்படுவதில்லை.

அந்தளவுக்கு இன்று எங்கு நோக்கினும் மாசு நிறைந்திருக்கிறது.

முதலில் மாசுபடும் உலகை காப்போம் என்றால்.
நீ யோக்கியமா என்று வார்த்தை வருகிறது அப்படியில்லை என்றால் கமல் நடித்த நாயகன் படத்தில் வருவது போல் அவனை நிறுத்த சொல் நான் நிறுத்திறேன் அப்படியும் வார்த்தை வருகிறது.

என்ன செய்ய.

குழந்தைகள் விளையாட ஓர் பசுமையான தூய்மையான இடம் இல்லை என்ற வருத்தம் தான்

குழந்தைகளை விளையாட அனுப்புவோம். கூடவே நாமும் விளையாடுவோம். விளையாட்டு மனிதனை மேம்படுத்துகிறது.
( கண்டிப்பாக வீடிகோகேம் அல்ல )

வயிற்றெறிச்சல்


நெருப்பையும் பகையையும் மிச்சம் வைக்க கூடாது என்று சொன்ன துக்ளக் சோ போன்றவர்களுக்கு.
கலைஞர் அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாத்ததை பார்த்து வயிற்றெறிச்சலாக தான் இருந்திருக்கும்.
இருக்காதா பின்ன பகையாளி ஒருவர் இப்படி வாழ்கிறார் அவர் பிறந்தநாளை மக்கள் ஏதோ பண்டிகையை போல கொண்டாடுகிறார்கள் என்றால்.
அப்படி வயிற்றெறிச்சல் கொண்டவர்களுக்கு ஜெலுசில் ஒரு அருமருந்து
சாப்பிடுங்கள். அப்படியும் இல்லை என்றால் மயிலாடுதுறை நகர கழகத்தின் நீர்மோர். வாருங்கள் பிறந்தநாள் ஸ்பெசல்
சாதி என்ற ஒன்றை ஒழித்தால் தான் சமுதாயம் உருப்படும் என்று சொன்ன இந்த திராவிட நாட்டில்

சாதிவாரி கணக்கெடு்ப்பும் மற்றும் அதற்குண்டான சாதிகட்சிகள்,
சாதி அமைப்புகளின் விளம்பரம் தீவிரமாக நடந்துக்டிகொண்டு தான் இருக்கிறது.

முதலில் நாண்கு சாதியாக இருந்தது இன்று நாற்பதாயிரம் சாதிகளாக பிரிந்துள்ளது.

இப்படியே போனால் நாகபதனியா, நாகப்பதனியா என்று 23ஆம் புலிகேசி கதை நடந்தேறும் என்பதில் ஐயம் இல்லை.
இதனை அரசு வேறு ஊக்குவிக்கிறது.
சாதிவாரி கணக்கெடுப்பதால் என்ன பயன்,

இதன்மூலம் அரசியல்வாதிகள் குறிப்பிட்ட சாதிக்கு அதாவது அதிகப்படியாக உள்ள சாதிக்கு சலுகைகள் கொடுத்து ஓட்டுபிச்சை வாங்கலாம் இது தான் லாபம்.

சாதி ஒழிப்பு போராட்டம் நடத்திய நம் தமிழ்நாட்டு காரர்களே இதற்கு உட்தையாக இருப்பது அபத்தம் தான்.

சித்தர்கள் பிரம்மசாரிகளா



பொதுவாகவே சித்தர்கள் ஆசைப்பட்டது ஆசையே இருக்ககூடாது என்பது அல்ல.

ஆசைக்கு அடிமையாக கூடாது என்றும். ஆசை தேவையுள்ளது தானா என அறியவைப்பதும் தான்

சித்தர்கள் வழிபடும் தெய்வம் அவர்களுக்கு நிர்வாணமாக தான் காட்சிதரும் என கூறுகிறார்கள்.

அப்படி காட்சிகரும் கடவுளர்களை பார்த்த சித்தர்களுக்கு ஒரு பெண் நிர்வாணமாக எதிரில் வந்தாலும் காமமாக பார்ப்பதில்லை. அப்படி பார்த்தால் அவர்கள் சித்தர்கள் இல்லை.

அது மட்டுமல்ல சித்தர்கள் திருமணம் செய்யாமல் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பார்கள்.  என்று கூறுவது சுத்த பொய். திருமணமாகி தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் தான் சித்தர்கள் முழுமையடைகிறார்கள். அதில் மிக சிலர் மட்டும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.
இதோ காகபுஜன்டர சித்தர் அவர் மனைவியுடன்

சித்தர்கள் வாழ்வில் கற்புக்கு முக்கியதுவம் தந்து வாழ்ந்திருக்கிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்று தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றி வாழ்ந்திருக்கிறார்கள்.

ஆக சித்தர்கள் காமாந்தகர்கள் அல்ல. ஆனால் இன்று காமாந்தகர்கள் சித்தர்கள் போர்வையில் திரிகிறார்கள். ஜாக்கிரதை.

இன்று உள்ள இந்த ஆனந்தா வகையறாக்களை நான் சொல்லவில்லை. 

கிராமத்தை நோக்கி நகர மக்கள்


மயிலாடுதுறை பகுதியில் அமைந்திருக்கும் உழவர் சந்தை இயங்குகிறதோ, இல்லையோ ஆணால் மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் சந்தை உதயமாகி மக்களுக்கு உதவி செய்கிறது.

முன்பெல்லாம் கிராம மக்கள் நகரத்தை நோக்கி பயணம் செய்தார்கள் ஆணால் இன்றோ மக்கள் கிராமத்தை நோக்கி பயணம் செய்யும் நிலைக்கு இந்த சந்தைகள் உருவாக்கியுள்ளது.

நம் முன்னோர்கள் அதாவது தாத்தா பாட்டி காலத்தில் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கியதை நினைவு படுத்துகின்றன.

மின்சாரம் மட்டும் தாத்தா காலத்தை நினைவு படுத்தவில்லை, 
இந்த சந்தைகளும் தான்