Tamil Script and printingகம்யூனிச மணல் வீடு

சிறு குழந்தைகள் கடற்கரையில் வீடுகட்டி விளையாடுவார்கள் நாம் பார்த்திருப்போம். ஒரு குழந்தை அதை கட்டி முடித்துவிட்டு சந்தோசமாக இருந்தாலும் வேறு யாரும் அதை இடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் பார்த்துகொண்டிருக்கும். அது நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நினைத்து அதை கவனித்துகொண்டிருக்கும். 

அப்படியே கவனித்தாலும் யாரும் அதை இடித்துவிடுவார்கள், இந்த கதை குழந்தைகளுக்கானது மட்டுமல்ல மிகப்பெரும் அரசியலுக்கும் அரசியல் சிந்தாந்தத்துக்கு உண்டானதும் கூட.

பொதுவுடைமை கட்சி என்று கூறப்படும் கம்யூனிஸ்ட் கட்சியும் இப்படிப்பட்ட நிலைமையில் தான் இருக்கிறது. 

ரஷ்யாவில் இன்று கம்யூனிசத்திற்கு பின் எங்கும் லஞ்சம் ஊழல் விபச்சாரம் என கொடிகட்டி பறக்கிறது.  ரஷ்ய கம்யூனிசம் தோல்வியில் போய் நிற்கிறது. சீன கம்யூனிசம் பரவாயில்லை. என்ன பெரிய வித்தியாசம் என்றால்.

ரஷ்ய கம்யூனிசம் கட்சியே அரசை கட்டுப்படுத்தும், ஆனால் சீன கம்யூனிசம் கட்சி வேறு அரசு வேறு என்று இருக்கும். ஆனால் பெரும்பாலும் கட்சியினரே அரச பதவியை வகிப்பர்.

சீன கம்யூனிசத்தை போல கேரள கம்யூனிசமும், ரஷ்ய கம்யூனிசத்தை போல மேற்குவங்க கம்யூனிசமும் இருக்கிறது.

தற்போது மேற்குவங்க கம்யூனிசம் தள்ளாட்டத்தில் தான் உள்ளது. 

கம்யூனிசம் மேலும் வளச்சி காதையில் செல்ல எந்த ஊர் கம்யூனிட்டாக இருந்தாலும். உண்மையான கம்யூனிட்டாக இருக்க வேண்டும். 

அப்படின்னு ஒரு தோழர் என்னிடம் புலம்பிகொண்டிருந்தார்.


எங்களது பக்கத்து ஊரில் ஒரு இட்லிகடை வைத்து பிழைப்பு நடத்திய ஓர் குடும்பம் இருந்தது. அந்த கடை ஓர் ரோட்டோர இட்லிகடை. அந்த கடையின் முதலாளி ரதியக்கா. இவர் ஓர் கைம்பெண். இந்த ரதிஅக்காவிற்கு இரு பெண் குழந்தைகள் அதில் ஒரு பெண் குழந்தை ஆறாவதும் மற்றோர் பெண் குழந்தை இரண்டாம் வகுப்பும் படிக்கிறார்கள்.இவரது கணவர்
இரண்டு வருடங்களுக்கு முன்பு மதுவின் தாக்கத்தால் கமாண்டிங் ஹலுசினேசன் என்ற மனசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு மனநோயாளியாகி தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார். இவர் ஓர் கூலி தொழிலாளி.
திருமணமான புதிதில் ரதிஅக்கா பெயருக்கேற்றாற்போல் நல்ல அழகாக தான் இருந்தார்கள். ஆனால் தற்போது அவர்களத கோலமே மாறிவிட்டது.
கணவர் இழந்த இந்த அக்கா கைம்பெண்களுக்காக உரசு தரும் உதவி தொகை வாங்க இருந்த நேரத்தில் அரசு பலருக்கு உதவிதொகையை நிறுத்தியிருந்தது. அதனால் தனக்கு எங்கு நிதியுதவி கிடைக்கும் என்று வெறுத்து மனு போடாமல் இருக்கிறார்.
இரு பெண்குழந்தைகளையும் கரை சேர்க்க வேண்டுமே என்று தனக்கு தெரிந்த கமையல்வேலையான இட்லி சுட்டு பிழைப்பு நடத்தி வந்தார். விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலைஉயர்வு, பேருந்துகட்டண உயர்வு என பல விலைஉயர்வுகளையும் உள்வாங்கி கொண்டு குறைந்த லாபம் கிடைத்தால் போதும் என்று இட்லி வியாபாரம் நடத்தி வந்தார்.
இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் சிலர் வீணாய் போன வீணர்கள் மது போதையில் வந்து விலையில்லா இட்லி கிடைக்குமா என்று வெட்டியாய் வம்பு வளர்ப்பதும் உண்டு.
அதையும் சகித்து கொண்டு பெண்பிள்ளைகளை கரை சேர்க்க வேண்டுமே என்று பிழைப்பு நடத்திவந்தவருக்கு திடீர் இடியாய் வந்து இறங்கியது அம்மா உணவகம்.
இதனால் பிழைத்த பிழைப்பு போய் வேறு தொழில் நடத்த தயாராகிவருகிறார்கள் இந்த அக்காவின் குடும்பம்.
அடுத்து அவர்கள் நம்பி இருப்பது .......................
இது போல் எத்தனை ரதி அக்காக்களோ.
இது போல காட்சி மாற வேண்டுமானால்
மாறவேண்டும்.......
விடியட்டும்

ஜேசீஸின் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நான் மயிலாடுதுறையில் ஜேசீஸ் என்ற அமைப்பில் உறுப்பினராக உள்ளேன். இந்த அமைப்பின் சார்பாக நடைபெற்ற தேர்தல் விழிப்பணர்வு பிரச்சாரத்திற்கு
திட்ட இயக்குனராக நான் அமர்த்தப்பட்டேன்.

             அந்த பிரச்சாரம் மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டிருக்கும் மாதிரி வாக்குசாவடியில் இருந்து துண்டுபிரசுரங்கள் வெளியிட்டு கடைவீதி முழுமையும் தருவதாகவும். முடிந்தால் அந்த மாதிரி வாக்குசாவடியில் ஏதாவது பணி செய்யலாம் என்று தான் முடிவு செய்திருந்தோம்.
             
             ஆனால் எங்களால் துண்டு பிரசுரங்கள் மட்டும் தான் வெளியிட முடிந்தது.  அந்த துண்டு பிரசுரத்தில் கீழ்கண்ட வாசகங்கள் தான் இடம்பெற்றிருந்தது.

             வாக்காளர் என்பதில் பெருமைபடுவோம். நாம் வாக்களித்து கடமையாற்றுவோம்.   நமது எதிர்கால குரல், நமது வாக்கு அதை சரியாக பயன்படுத்துவோம்.    நாம் வாக்காளர் என்பதை அடையாளப்படுத்துவோம், வாக்களிக்க தயாராக இருப்போம்.    மனதில் உறுதிவேண்டும், மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும்.  நோட்டுக்காக ஓட்டல்ல, ஓட்டை விற்காதீர்..
நமது வாக்கு நமது உரிமை.....
தமிழனின் கலை சிலம்பாட்டம்.

தமிழனின் அழிந்து வரும் கலைகளில் ஒன்றாக இருக்கிறது சிலப்பமும், குத்து விளையாட்டும். சிலப்பம் பயிற்சி உடல்நலத்துடன் வாழ்வதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

இன்று இந்த சிலம்பம் விளையாட்டுக்கும், குத்துவரிசைக்கும் கற்றுதர ஆள்இல்லாமல் இருக்கிறது. இன்னும்சில

இதனால் எனது வர்மகலை ஆசான் ராஜேந்திரன் கிருஷ்ணராஜ்
திரு. https://www.facebook.com/rajendran.krishnaraj?fref=ts
அவர்கள் இந்த சிலம்பம், வர்மம், தஞ்சை குத்துவரிசை பிடிவரிசை போன்ற கலைகளை ஊக்கப்படுத்தவேண்டும்

அதனை முறையாக கற்று, பிறருக்கு கற்று தரும் ஆசான்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு அரசால் ஏதேனும் ஆதாயம் ஏற்படுத்தி தர முன்வரவேண்டும் என்று முன்பே கூறியிருந்தார்கள்.

அதன்பொருட்டு இந்த கலைகளில் சிலப்பம் மற்றும் குத்துவரிசை கற்றுதரும் ஆட்களை எங்கெங்கோ தேடி. இறுதியில் எனது ஊரான மயிலாடுதுறையின் அருகில் உள்ள கோடங்குடி- நெடுமருதூரில் ஒருவரை சந்தித்தேன்.

அவர் பெயர் செல்வராஜ், வயது 73, இவரிடம் தான் தற்போது சிலம்பமும், குத்து வரிசையும் கற்றுவருகிறேன்.

இவரும் இவரது துணைவியாரும் மிகவும் வருமையில் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஓர் பண்ணையில் தினகூலி வேலையில் இருக்கிறார்கள்.

இவர்கள் போல் இன்னமும் பல ஆசான்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தேடிக்கொண்டிருக்கிறோம்.

என்னை போல் திருச்சி பாலா, பெங்களுர் மணிகண்டன், மணிகண்டா போன்றோர்கள்.

அதற்கு ஓர் தீர்வு அதாவது இந்த தமிழனின் கலைகள் அழியாமல் இருக்க அரசு இவர்களுக்கு ஊக்க தொகை கொடுத்து ஊக்கப்படுத்தி கௌரவிக்க வேண்டும் என்பது மட்டுமின்றி.

இவருடன் இந்த கலை அழியாமல் இருக்க கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இவரை தொடர்பு கொள்ளவேண்டுமாய் கேட்டுகொள்கிறேன். ஆசான் எண் 8870726154.

இவருடன் இந்த கலை அழியாமல் காப்போம்.
இதில் எனது புகைப்படமும், ஆசான் புகைப்படம் மற்றும் இவர் சிலம்பம் சுற்றும் காணொளியும் இணைத்துள்ளேன்.
http://www.youtube.com/watch?v=jJKIKPdDgj0

கிட்டி பில்லு

கில்லி அப்படின்னாலே நமக்கு விஜய் நடிச்ச படம் தான் நினைவுக்கு வரும். ஆனால் இந்த கில்லி அழிஞ்சி்கிட்டு வர ஒரு விளையாட்டோட பெயர் அப்படின்னு நமக்கு தெரியாது.

இன்னம் கொஞ்ச நாள்ல 7ஆம்அறிவு படத்துல வர போதிதர்மனை பத்தி இந்திய மக்கள் கிட்ட பேட்டி எடுப்பாங்க அப்ப இந்த போதிதர்மனை பத்தி எத்தனை பேருக்கு தெரியும்னு ஒரு கேள்வி வரும். அது போல கிட்டிபில்ல பத்தி எத்தனை பேருக்கு தெரியும் அப்படின்னு பேட்டி எடுத்தாலும் எடுப்பாங்க ஏன்னா இது கிரிக்கெட்டுக்கு முன்னோடி.

கிட்டிபுல்லு இந்த விளையாட்டு எங்கிருந்து  வந்தது என்று தெரியவில்லை.
அனால் Lippa (gioco),என்று இத்தாலியில் இந்த விளையாட்டை போல அங்கு ஒரு விளையாட்டு பழக்கத்தில் உள்ளது .
இதற்கு தேவைப்படும் இரண்டு குச்சிகள் (தண்டா,கில்லி),தமிழ் நாட்டிற்கு இது அறிமுகம் தேவை இருக்காது .இதற்கு இவ்வளவு நபர் தான் விளையாட வேண்டும் என்று விதிகளும் கிடையாது.இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவிலும்,வடக்கில் பஞ்சாப்,பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்,போன்ற இடங்களில் அதிகம் விளையாடுகிறார்கள். தமிழகத்தில் கிராம புறங்களில் இது தான் தேசிய விளையாட்டு.ஆனால் கிட்டிபுல்லை அடிபடையாக வைத்தே baseball, cricket போன்ற விளையாட்டுகள் வந்திருக்ககூடும் என்று சில ஆய்வுகள் கூறுகிறது.
நமக்கு தெரியாத செய்தி இதற்கு International championship tournaments நடத்தப்பட்டுள்ளன என்பது.ஐந்து முறை நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதி இருக்கின்றன.,மூன்றில் பாகிஸ்தானும் இரண்டு ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் சமமாக முடிந்துள்ளது.

விதிகள்
ஒரு ஒரு இடங்களில் இந்த விளையாட்டில் விதிகள் திருத்தி விளையாட படுகின்றன.பெரிய செலவு செய்து எதுவும் வாங்க தேவை இல்லை இரண்டு குச்சி செய்தால் இந்த விளையாட்டு ரெடி.அதுவும் சுவாரசியமான விளையாட்டு.

இதன் மற்ற மொழி பெயர்கள்:

கில்லி-தண்டா-தேவநாகரி.
டங்குளி - பங்களாதேஷ்.(பங்களா)
சின்னி-தண்டு-கர்நாடகா.(கன்னடா)
விட்டி-தண்டு-மகாராஷ்டிரா.(மராத்தி)
கிட்டிபுல்லு-தமிழ்.
கூட்டி-பில்லா-ஆந்திரா.(தெலுங்கு)
லப்ப-துக்கி-பஷ்டோ.

விளையாடப்படும் இடங்கள் :இந்தியா(குறிப்பாக தென் இந்தியா),பாகிஸ்தான்(பஞ்சாப்),இத்தாலி,அமெரிக்கா(பீ-வீ),பிலிப்பைன்ஸ்(சயடோங் )மற்றும் சில ஐரோபிய நாடுகள்.

நம்ம சச்சின் டோனி மாதிரி உள்ள கிட்டிபுல்லு "SUPERSTARS":

இந்தியா
வருன்,அஜய்,ரோகித்மிஸ்ரா(IIT,Bhuvaneshwar,மாணவர்),விஜய் சௌதரி,விவேக் பரன்வல்,உபேந்தர் குமார்,சந்தீப் பிரகாஷ் .
பாகிஸ்தான்:
நூர் கான்,அப்துல்ஹமீது, நதீம் ஜமீல்,அஸேம் சித்திகி

மெதுவாக மறந்து வரும் கிரிக்கெட்டிற்கு முன்னோடியான இந்த விளையாட்டை கிராமத்து இளையர்கள் தான் முற்றிலும் அழிந்து விடாமல் ஏதோ விளையாடி வருகிறார்கள்.


நன்றி - முகநூல்

இயற்கை

இயற்கை நமக்கு ஒரு வரப்பிரசாதம். இயன்ற வரை மனிதகுலத்திற்கு நன்மையே செய்துக்கொண்டிருக்கும். இந்த இயற்கைகையை மனிதன் செயற்கை மூலமாக மாற்றம் செய்துகொண்டு தானும் கெட்டு மற்ற உயிரினங்கைளையும் கெடுத்துக்கொண்டிருக்கிறான்.

இயற்கையை மற்ற எந்த உயிரினமும் மாற்றம் செய்ய நினைக்கவில்லை ஆனால் மனிதன் மட்டும் தான் அதற்கு விதிவிலக்கு என்பது போல் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

மரங்கள் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிலிருந்து இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் மருந்துகள் ஏராளம்.

மனிதர்கள் தான் இயற்கையை மாற்றி அமைக்கிறார்கள், அவர்களால் தான் இயற்கை அழிக்கப்படுகிறது என்பது தவறு.

ஆஸ்திரேலியாவில் முயல்கள் அந்த நாட்டின் புல்வளத்தை அழித்ததாக படித்திருப்போம்.

அது போல் இந்தியாவில் காட்டு யானைகள் வயல்களில் இறங்கி விவசாய நிலத்தை பாழ்படுத்தியதாகவும் பார்த்திருக்கிறோம். ( கும்கி திரைபடம்).

ஆக மனிதர் மட்டும் அல்ல சில விலங்குகளுமே இதற்கு விதிவிலக்கல்ல. அப்படியே இருந்தாலும் மனிதர்கள் என்ன செயற்கையா.