இயற்கை

இயற்கை நமக்கு ஒரு வரப்பிரசாதம். இயன்ற வரை மனிதகுலத்திற்கு நன்மையே செய்துக்கொண்டிருக்கும். இந்த இயற்கைகையை மனிதன் செயற்கை மூலமாக மாற்றம் செய்துகொண்டு தானும் கெட்டு மற்ற உயிரினங்கைளையும் கெடுத்துக்கொண்டிருக்கிறான்.

இயற்கையை மற்ற எந்த உயிரினமும் மாற்றம் செய்ய நினைக்கவில்லை ஆனால் மனிதன் மட்டும் தான் அதற்கு விதிவிலக்கு என்பது போல் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

மரங்கள் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிலிருந்து இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் மருந்துகள் ஏராளம்.

மனிதர்கள் தான் இயற்கையை மாற்றி அமைக்கிறார்கள், அவர்களால் தான் இயற்கை அழிக்கப்படுகிறது என்பது தவறு.

ஆஸ்திரேலியாவில் முயல்கள் அந்த நாட்டின் புல்வளத்தை அழித்ததாக படித்திருப்போம்.

அது போல் இந்தியாவில் காட்டு யானைகள் வயல்களில் இறங்கி விவசாய நிலத்தை பாழ்படுத்தியதாகவும் பார்த்திருக்கிறோம். ( கும்கி திரைபடம்).

ஆக மனிதர் மட்டும் அல்ல சில விலங்குகளுமே இதற்கு விதிவிலக்கல்ல. அப்படியே இருந்தாலும் மனிதர்கள் என்ன செயற்கையா.

சம்பாபதி அம்மன்

 பூம்புகார் என்ற புராதான நகரை பற்றி  நாம் நினைத்தால் நமக்கு நினைவு வருவது சிலப்பதிகாரமும்,  கடற்கரையும்,  கலைகூடமும்  தான்.

பண்டைய தமிழகத்தின் கலாச்சாரமும், பண்பாடும், கட்டிடகலையும் கூட எச்சங்களாக இன்னமும் மிச்சம் இங்கு இருக்கின்றன இந்த புராதான நகரில் பழைய அடையாளங்கள் இன்னமும் தக்க வைத்துள்ளது.

2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புத்தவிகாரை ஒன்று இங்கு அங்குள்ளது.

அது போல் கரிகாற்சோழன் காலத்து மடை ஒன்றும் இங்குள்ளது. இது நம் தமிழர்களின் கட்டிட மற்றும் பொறியியல் அறிவை அன்றே இந்த கட்டிடங்கள் வெளிபடுத்துகின்றன. 
( அந்த படங்கள் இதில் இல்லை ).

அது மட்டுமின்றி சிலப்பதிகாரத்தில் வரும் சம்பாபதியம்மன் ஆலயமும் இந்த பூம்புகார் அருகில் உள்ள சாயாவனம் எனும் ஊரில் தான் உள்ளது.

இந்த சம்பாபதி ஆலயத்தை பற்றி கூற வேண்டுமானால் இது ஒரு திராவிட கலாச்சாரத்தை இன்னமும் பறைசாற்றி கொண்டிருக்கும் ஒரு ஆலயமாக தான் நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் இன்னமும் இந்த கோவிலுக்கு சமஸ்கிருத மந்திரமும், பிராமனியமும் நுழையாமல் இருக்கிறது.

ஆரியம் உள்ளே நுழையாத அந்த சிலப்பதிகார காலத்தில் கண்ணகிக்கும், மாதவிக்கும் குலதெய்வமாக இருந்தது இந்த சம்பாபதியம்மன் என்றும் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.

மணிமேகலை நூலில் மணிமேகலையை துரத்தி வந்த உதயகுமாரனிடமிருந்து மணிமேகலையையை மீட்ட தெய்வம் என்று இந்த தெய்வம் கூறப்படும்.

அப்படிப்பட்ட தெய்வம் இருக்கும்  இருந்த கோவில் இன்று சிதிலமடைந்து பாழடைந்து கிடக்கிறது. ஆனால் தற்போது அந்த அம்மன் இருப்பது என்னவோ அருகில் உள்ளஒரு குடி்சையில் தான். 

சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் இந்த தெய்வத்தை பற்றி பல குறிப்புகள் உள்ளது.

அது மட்டுமின்றி சதுக்கபூதம் பற்றிய குறிப்புகளும் இந்த சிலப்பதிகாரத்தில் உள்ளது. அந்த சதுக்கபூதத்தின் சிற்பம் சற்றே சிதிலமடைந்தாலும் பார்க்க கம்பீரமான தோற்றத்துடன் காண்போரை வியப்படைய செய்யும் வண்ணம் இருக்கிறது.  அது மட்டுமின்றி பழந்தமிழர்களின் கலாச்சாரத்தை இன்னமும் பறைசாற்றும் விதமாக கம்பீரமாக இருக்கிறது.
இந்த கோவிலை பொறுத்தவரை கடவுள் இருக்கிறதா இல்லையா என்பது பிரச்சினை இல்லை, ஆரியம் இன்னமும் நுழையாத திராவிட கலாச்சாரத்தை பறைசாற்றும் இந்த கோலிலுக்கு பழம்பெருமை பேசும் நாம் என்ன செய்யபோகிறோம்.