சித்தர்கள் என்று நம்மாள் அழைக்கப்படும் அந்த நபர்கள் மனித இனத்தின் மீதும் மனித சமுதாயத்தின் மீதும் அதீத பற்று கொண்டு பல ரகசியங்களை உலகிற்கு எடுத்துகூறி மனித வாழ்க்கையை மேம்படுத்தியவர்கள்.
இவர்கள் ஆசையை முழுதும் ஒழித்தவர்கள் அல்ல.
மனித சமுதாயம் மேம்படவேண்டும் என்ற ஆசை உடையவர்கள்.
ஆசையே இல்லாதவன் தான் சித்தன் என்று கூறமுடியாது. ஆசைபடுபவனும் சித்தன் தான்.
அந்த ஆசை எப்படிப்பட்டது என்பதை பொறுத்து இருக்கிறது.
தேவையற்ற ஆசையை வைத்து கொண்டு இன்பம் துன்பம் இரண்டையும், சமமாக பாவிக்க முடியாது.
அப்படி சமமாக பாவிக்க ஆசையை தேவையுள்ள ஆசையாக மாற்றிக்கொள்ளவேண்டும்.
அப்படி அந்த ஆசையை பகுத்தறிந்து, இனம் கண்டவர்கள் அனைவருமே சித்தராவதற்கு தகுதியுள்ளவர்களே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக