சந்திர சூரிய சுழச்சியின் காரணமாக நமது நாட்கணக்குகளை அன்றே நம் முன்னோர்கள் குறித்துவைத்திருக்கிறார்கள், இதில் சந்திரனின் பௌர்ணமி முதல் அமாவாசை வரை உள்ள நாட்களுக்கு பெயர்கள் வைத்து கால நிர்ணயம் செய்தார்கள். அது பௌர்ணமிக்கோ அமாவாசைக்கோ அடுத்த நாளில் இருந்து முறையே பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்தசி பிறகு அமாவாசையோ அல்லது பௌர்ணமியோ.
இதில் அஷ்டமி என்பது 8வது நாள் என்பதால், நாம் 8 ராசியில்லாத எண் என்றும் அது நல்ல நாள் அல்ல என்பது சிலரது கருத்து.
உண்மையிலேயே அமாவாசைக்கும், பௌர்ணமிக்கும் உள்ள சக்தியை விட இந்த அஷ்டமிக்கு அதிக சக்தி உண்டு என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.
அமாவாசையின் சக்தியையும், பௌர்ணமியின் சக்தியையும் முழுவதுமாக கொண்டது. அஷ்டமி ஆக எந்த நாளும் கெட்ட நாள் அல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக