அன்பே சிவம்


அன்பே சிவம் என்றவுடன் இது கமல் பட டைட்டில் அப்படின்னும் அன்பே சிவம் பாடலும் தான் பலருக்கு அது தான் நினைவுக்கு வரும், ஆணால் நான் நேரில் கண்ட காட்சி,

நாத்திகம் பேசும் நல்லவருக்கு அன்பே சிவம், ஆத்திகம் பேசும் அடியாருக்கு சிவமே அன்பு என்பதற்கினங்க ஊர் சம்பவம்.

பிரதோஷ காலத்தில் பிரதோஷ விரதம் எடுத்து கோவிலுக்கு போய் வந்த சில அன்பர்கள் தெரு முனையில் ஓர் வீட்டில் வயதான ஒருவர் மாரடைப்பில் தவித்துக்கொண்டிருக்க, அதை கண்ட அந்த பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்கு போயிட்டு அடுத்தவர்கள் வீட்டிற்கு சென்றால் அந்த புண்ணியம் அந்த வீட்டிற்கு போய்விடும் எக்று போகாமல் விரைவாக தன் வீட்டிற்கு செல்லும் போது ஒருவர் மட்டும் கோவிலுக்கு அருகிலிருந்து, அந்த வயதானவர் வீட்டிற்கு நுழைந்து அவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்று காப்பாற்றினார்.
அவரை பற்றி விசாரித்தில் அவர் ஓர் நாத்திகர் என்றும், அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் தெரியவந்தது.
சிவமே அன்பெனதை விட அன்பே சிவம் மேல் என்ற உணர்வு ஏற்பட்டது அன்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக