அண்ணா து(ரை)றை

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கிணங்க குறைவான உயரம், குள்ளமான உருவம், ஆணால் குணமான உள்ளம்.

மாற்றான்தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்று மற்றவரையும் மதிக்கும் குணம்.

மறப்போம், மன்னிப்போம் எனும் எண்ணம் இது மட்டுமல்ல இன்னமும் பல நல்லனவற்றை சொல்லலாம் அறிஞர் அண்ணாவை பற்றி.

திராவிட கட்சிகள் இவரின் பெயர் இல்லாமல் இயங்காது.

அப்படிபட்ட அரசியலில் அசைக்க முடியாத ஏன் மறக்க, மறுக்க முடியாத அச்சு அண்ணா.

அண்ணா சொன்ன ஒன்றே குலத்தையும் மறந்து ஒருவனே தேவன் என்பதையும் மறக்கவில்லை மக்கள் ஆணால் அந்த ஒருவன் யார் என்பதில் தான் பிரச்சினையே.

அதற்குண்டான பதிலை அண்ணா அவர்களே சொல்லிவிட்டார். ஏழையின் சிரிப்பினில் இறைவனை காணலாம் என்று, இருந்தாலும் இன்று ஏழைகள் சிரிப்பு என்பது கேள்விக்குறியதாகிவிட்டது.

ஆக பெரியார் சொன்ன கடவுளை ஒழிக்கவேண்டும் என்பதற்கும், அண்ணா செய்த ஆட்சிக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது.

பெரியார் சொன்ன கடவுள் மறுப்பிற்கு ஏழைகள் மறுப்பு என்று எடுத்துக்கொள்வோம். தமிழ்நாட்டில் ஏழைகள் என்பதை ஒழிக்க பாடுபட்டார் அண்ணா. ஆக பெரியாரும் அண்ணாவும் வெவ்வேறானார்கள் என்றாலும் போன பாதை ஒன்றே தான். புரிந்தவர்களுக்கு.

ஆக இதனை கட்சிகள் புரிந்துகொண்டு செயல்படட்டும். இதற்கு தனி துறை வேண்டாம். அண்ணாதுரையின் அந்த துறை அதாவது அண்ணா துறையே போதும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக